பட மூலாதாரம், Getty Images
“இருபது ஆண்டுகளுக்கு முன்பு, 2003 மார்ச் 23 அன்று, கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதின. சௌரவ் கங்குலி மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் கேப்டன்களாக இருந்தனர்.
இந்தியா டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தது. ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்டேரர்ஸ் ஸ்டேடியம் சுமார் 32 ஆயிரம் ரசிகர்களால் நிரம்பியிருந்தது. போட்டி தொடங்குவதற்கு முன், இரு அணிகளின் வீரர்களும் வரிசையில் நின்றனர்.
‘ஜன கண மன’ ஒலிக்கத் தொடங்கியதும் எனக்கு மெய் சிலிர்த்தது. ஒவ்வொரு துளியிலும் உற்சாகம் பொங்கி எழுந்தது. என் கால்களில் ஒரு விசித்திரமான நடுக்கம் ஏற்பட்டது. ‘ஜெய் ஹே, ஜெய் ஹே, ஜெய் ஹே.’ ஜெய் ஜெய் ஜெய் ஹே’ என்ற கோஷத்துடன், முழு அரங்கமும் இடிக்கு ஒப்பான ஒலியுடன் எதிரொலித்தது.”
அந்தத் தருணங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது, உணர மட்டுமே முடியும். ஒரு செய்தியாளராக நானும் அங்கு இருந்திருக்கிறேன். அதை உணர்ந்திருக்கிறேன்.
ஆனால் சில மணிநேரம் கழித்து, பெருமைப்படும் உணர்வுகள் வருத்தத்தின் தருணங்களாக மாறிவிட்டன. ஏனெனில் இந்திய அணி எந்தவொரு போராட்டமும் இல்லாமல் இறுதிப் போட்டியை இழந்தது. கடந்த 20 ஆண்டுகளில் ஒரு கால சுழற்சி நிறைவடைந்துள்ளது போல் தெரிகிறது.
மேலும் இரு அணிகளும் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மீண்டும் மோதவுள்ளன. அப்போதிருந்து நிறைய விஷயங்கள் மாறிவிட்டன, வரலாறும் மாற விரும்புகிறது.
கடந்த 2003ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியது. இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவிய இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது, ஆனால் ஆஸ்திரேலியா தோல்வியுறாமல் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இந்த முறை இந்திய கிரிக்கெட் அணி ஆதிக்கம் செலுத்துகிறது, இறுதிப் போட்டி வரை இந்திய அணிதான் தோல்வியுறாதது. 2003ஆம் ஆண்டின் இந்திய அணியைப் போல, 2023ஆம் ஆண்டில் இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவிய பின்னரே ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது சுவாரஸ்யமானது.
நிலைமைகள் மாறியுள்ளன

பட மூலாதாரம், Getty Images
அப்போதைய இறுதிப்போட்டி நடுநிலை நாடான தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. இரு அணிகளுக்கும் ஆதரவாக 32 ஆயிரம் ரசிகர்கள் இருந்தனர். இந்த முறை, அரங்கத்தில் ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரசிகர்கள் இருப்பார்கள். அவர்களின் உற்சாகமும் ஆரவாரமும் வானத்தில் எதிரொலிக்கும். சொந்த மண்ணில், ரசிகர்கள் முன் இந்திய அணியின் வெற்றித் தேரை தடுத்து நிறுத்துவது ஆஸ்திரேலியாவுக்கு அவ்வளவு எளிதல்ல.
அனைத்து ஒப்பீட்டு ஆய்வுகளும் வரலாறு திரும்பி வருவதைக் காட்டுகின்றன. இந்த உலகக்கோப்பையின் முதல் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை தோற்கடித்துள்ளது. முதல் இரண்டு ஓவர்களுக்குள் மூன்று மட்டையிலக்குடுகள் வீழ்ந்தாலும்கூட இந்தியா வெற்றி பெற முடிந்தது. லீக் போட்டியில், விராட் கோலி 85 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார், கே.எல்.ராகுல் 97 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியா 2003 உலகக்கோப்பையின் லீக் போட்டியில் சென்சுரியனில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்தது. கிளென் மெக்ராத், பிரெட் லீ மற்றும் ஜேசன் கில்லெஸ்பி ஆகியோர் இந்தியாவின் பந்துவீச்சு சுற்றுஸை வெறும் 125 ரன்களுக்குள் சுருட்டினர். ஆஸ்திரேலியா 23வது ஓவரிலேயே 9 மட்டையிலக்குடுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பட மூலாதாரம், Getty Images
இரு அணிகளும் இறுதியில் மீண்டும் மோதியபோது, கேப்டன் ரிக்கி பாண்டிங் 121 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 141 ஓட்டங்கள் அடித்தார். ஆஸ்திரேலியாவின் 359 ரன்களின் அழுத்தத்தின் கீழ் இந்திய சுற்று தடுமாறியது.
சச்சின் டெண்டுல்கர் 4 ஓட்டங்கள் எடுத்தார், சௌரவ் கங்குலி 24 ஓட்டங்கள் எடுத்தார், முகமது கைஃப் கூட தனது கணக்கைத் திறக்க முடியவில்லை. வீரேந்தர் செவாக் 82 ஓட்டங்கள் எடுத்து சற்றுத் தடுமாறினார், ராகுல் திராவிட் 47 ஓட்டங்கள் எடுத்தார்.
ஆனால் ஆஸ்திரேலியா 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது. இந்திய ரசிகர்கள் இந்தக் கதை மீண்டும் நிகழ்த்தப்பட வேண்டும், ஆனால் கதாபாத்திரங்கள் மாற்றப்பட வேண்டும் என விரும்புகிறார்கள்.
அதாவது வெற்றி பெறும் அணி இந்தியாவாக இருக்க வேண்டும். மேலும் மூன்றாவது முறையாக இந்தியா உலக சாம்பியனாக வேண்டும். உலகக் கோப்பையில் இதுவரை நடந்த போட்டிகளில் இந்திய அணிக்கு மேல் கை இருப்பது தெளிவாகிறது.
இந்தியா பெரும்பாலான போட்டிகளைச் சிறப்பாக வென்றுள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா, சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகியோர் முதன்மையான ஆர்டரில் சிறப்பாக உள்ளனர். ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் மிடில் ஆர்டரில் தங்கள் பங்கைச் சிறப்பாக ஆற்றியுள்ளனர்.

பட மூலாதாரம், ANI
ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் டாப்-5இல் இல்லை
இந்திய பந்துவீச்சு இதுவரை இருந்ததிலேயே சிறந்ததாகக் கருதப்படுகிறது. முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் எதிரணி பேட்ஸ்மேன்களை பிழைத்திருக்க விடவில்லை. ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் எந்தவொரு பேட்ஸ்மேனையும் மிடில் ஓவர்களில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கவில்லை.
இந்தக் கண்ணோட்டத்தில் இருந்து, எல்லாம் சிறப்பாக நடக்கிறது. கிரிக்கெட் ஒரு அணி விளையாட்டு. மட்டையாட்டம், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் ஒன்றாக இணைந்தால், அத்தகைய சிறந்த நிலையில் எந்த அணியின் வெற்றித் தேரையும் யாரும் தடுக்க முடியாது.
அணி விளையாட்டு என்ற பிரச்னையும் முக்கியமானது. ஏனெனில் 2003 உலகக் கோப்பையில் சச்சின் டெண்டுல்கர் அதிகபட்சமாக 673 ஓட்டங்கள் எடுத்தார். இரண்டாவது இடத்தில் சௌரவ் கங்குலி 465 ஓட்டங்கள் எடுத்தார். ரிக்கி பாண்டிங் 415 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் இருந்தார். இந்திய வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர், ஆனால் அணி செயல்பாடு ஆஸ்திரேலியாவுவிடம் நன்றாக இருந்தது.
இந்த முறை, விராட் கோலி அனைத்து முந்தைய சாதனைகளையும் முறியடித்து, இறுதிப்போட்டிக்கு முன்பே அதிகபட்சமாக 711 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 550 ஓட்டங்கள் எடுத்துள்ளார், இறுதிப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடிக்க முடியும்.
ஆஸ்திரேலியாவிலிருந்து எந்தவொரு பேட்ஸ்மேனும் டாப்-5இல் இல்லை. டேவிட் வார்னர் அதிகபட்சமாக 528 ஓட்டங்கள் எடுத்து ஆறாவது இடத்தில் உள்ளார். 2003இல் டாப்-5இல் இரண்டு பேட்ஸ்மேன் இருந்தனர், இம்முறை விராட், ரோஹித் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்பே டாப்-5இல் உள்ளனர்.
கேப்டன் ரோஹித் சர்மா போட்டிக்கு முந்தைய நாள் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், “உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பேகூட, இதுபோன்ற கிரிக்கெட் விளையாடத்தான் எனக்கு திட்டம் இருந்தது. இது வேலை செய்யுமா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை.
நான் தைரியமாக என் விளையாட்டை விளையாட விரும்பினேன். நான் இங்கிலாந்துக்கு எதிராக என் விளையாட்டை மாற்றினேன், மூத்த வீரர்கள் இதைச் செய்ய வேண்டும்.”
“நான் அதிகமாக உற்சாகப்பட விரும்பவில்லை. அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. போட்டி நாளில் நன்றாக கிரிக்கெட் விளையாடுவதே முக்கியம் என்று நினைக்கிறேன். கடந்த 10 போட்டிகளில் நான் என்ன செய்திருக்கிறேன் என்பது முக்கியமல்ல. நான் நிச்சயமாக நம்பிக்கை அடைந்துள்ளேன்,” என்றார்.
இந்திய பந்துவீச்சாளர்களின் அச்சுறுத்தல்

பட மூலாதாரம், ALEX DAVIDSON-ICC/ICC VIA GETTY IMAGES
இலங்கையின் சமிந்தா வாஸ் 2003 உலகக் கோப்பையில் அதிகபட்சமாக 23 மட்டையிலக்குடுகள் எடுத்தார். பிரெட் லீ 22 மட்டையிலக்குடுகள் எடுத்தார், கிளென் மெக்ராத் 21 மட்டையிலக்குடுகள் எடுத்தார். சஹீர் கான் 18 மட்டையிலக்குடுகள் எடுத்து நான்காவது இடத்தில் இருந்தார். ஜவகல் சீனிவாஸ் 16 மட்டையிலக்குடுகள் எடுத்தார், ஆஷிஷ் நேரா 15 மட்டையிலக்குடுகள் எடுத்தார்.
இந்த முறை முகமது ஷமி வெறும் ஆறு போட்டிகளில் 23 மட்டையிலக்குடுகள் எடுத்து துவம்சம் செய்து வருகிறார். ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா 10 போட்டிகளில் 22 மட்டையிலக்குடுகள் எடுத்துள்ளார்.
ஜஸ்ப்ரித் பும்ரா 18 மட்டையிலக்குடுகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார். அதாவது, இந்தியாவுக்கு டாப்-5இல் இரண்டு பந்துவீச்சாளர்கள் உள்ளனர், 2003இல் ஒரு பந்துவீச்சாளர் மட்டுமே டாப்-5இல் இருந்தார்.
கேப்டன் ரோஹித் சர்மா முதல் நான்கு போட்டிகளில் ஷமி விளையாடாதது குறித்து விளக்கமளித்தார், “ஷமி முதல் நான்கு போட்டிகளில் விளையாடாதது கடினமாக இருந்தது. ஆனால் அவர் தொடர்ந்து பும்ரா மற்றும் சிராஜுக்கு உதவி செய்து கொண்டிருந்தார். இது அவர் எவ்வளவு பெரிய அணி வீரர் என்பதைக் காட்டுகிறது.
அவர் விளையாடாதபோது நாங்கள் அவருடன் பேசிக்கொண்டிருப்போம். அவர் கடுமையாக உழைத்துக்கொண்டிருந்தார். இது அவரைப் பற்றி நிறைய கூறுகிறது. அவருக்கு வாய்ப்பு கிடைத்தவுடன் அவர் அதைப் பிடித்துக்கொண்டார். இது அவரது செயல்பாட்டில் தெரிகிறது.”
எனவே, மொத்தத்தில், 2003இல், சச்சின் டெண்டுல்கர் மற்றும் சௌரவ் கங்குலி ஆகியோர் முதல் ஐந்தில் இடம்பெற்ற இரண்டு பேட்ஸ்மேன்கள், இந்த முறை இது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா.
சஹீர் கான் 2003 இல் மட்டுமே டாப்-5இல் இருந்தார், இந்த முறை முகமது ஷமி மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்பே ஐந்து நட்சத்திரங்களில் உள்ளனர்.
ரோஹித் சர்மா , “நான் கேப்டனாக ஆனதில் இருந்து, இந்த நாளுக்காக நாங்கள் தயாராகி வருகிறோம். டி-20 உலகக்கோப்பை மற்றும் உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் விளையாடினோம். மூன்று வடிவங்களிலும் சரியான வீரர்களைத் தேர்வு செய்ய விரும்பினோம்.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக இதைச் செய்து வருகிறோம். அனைவரின் பங்கையும் தெளிவுபடுத்தியுள்ளோம். இது எங்களுக்கு நிறைய உதவியது, இறுதிப் போட்டியிலும் நன்றாகச் செயல்படுவோம் என்று நம்புகிறோம்,” என்றார்.
ஆஸ்திரேலியாவை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக்கூடாது

பட மூலாதாரம், Getty Images
ஆனால் இந்திய அணி எந்தவொரு சிறிய அலட்சியத்தையும் காட்ட வேண்டியதில்லை. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மிகவும் உறுதியானது. ஐந்து உலகக்கோப்பைகளை வென்ற அணிக்கு இறுதிப் போட்டிகளை எப்படி வெல்வது என்று தெரியும்.
முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த பிறகு, பலர் ஆஸ்திரேலியாவை எழுதித் தள்ளினர். இருப்பினும், ஆஸ்திரேலியர்கள் ஒருபோதும் மனதளவில் பலவீனமாக இருந்ததில்லை.
கங்காரூ தேசத்தினர், வலுவான மறுபிரவேசம் செய்து, அவர்களின் கடைசி ஏழு போட்டிகளில் அனைத்தையும் வென்றனர். மேலும் அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து எட்டாவது முறையாக உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தங்கள் இடத்தைப் பிடித்தனர்.
இருப்பினும், அணியின் மட்டையாட்டம்கில் நிலைத்தன்மை இல்லாதது தெளிவாகத் தெரிகிறது. இந்திய அணியைப் போலல்லாமல், அவர்கள் தனிப்பட்ட செயல்பாட்டின் அடிப்படையில் இறுதிப் போட்டியில் உள்ளனர்.
அரையிறுதியில் ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் மிட்செல் விண்மீன்க் காட்டிய போராட்ட குணம் ஓர் எச்சரிக்கை மணி. டிராவிஸ் ஹெட் மற்றும் கிளென் மெக்ஸ்வெல் ஆகியோர் மிடில் ஓவர்களில் ஓட்டத்தை ரேட்டை கட்டுப்படுத்த முயல்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
புள்ளிவிவரங்களைப் பற்றிப் பேசுகையில், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் உலகக்கோப்பையில் 13 முறை மோதியுள்ளனர். இறுதிப் போட்டியில் ஒருமுறை மட்டுமே மோதியுள்ளனர். இந்த 13 போட்டிகளில், ஆஸ்திரேலியா 8 வெற்றிகளையும் இந்தியா 5 வெற்றிகளையும் பெற்றுள்ளது.
மொத்தத்தில், ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளுக்கும் இடையே 150 மோதல்கள் நடந்துள்ளன. அவற்றில் ஆஸ்திரேலியா 83 முறை வெற்றி பெற்றுள்ளது, இந்தியா 57 முறை வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011ஆம் ஆண்டு ஒருநாள் போட்டி உலகக்கோப்பையை வென்றது. ரோஹித் சர்மா அந்த அணியில் இடம் பெறவில்லை, அது அவருக்கு இன்னும் வேதனையாகவே இருக்கிறது.
“கடந்த 2011ஆம் ஆண்டு எனக்கு உணர்ச்சிவசப்பட்ட மற்றும் கடினமான காலம். ஆனால் தற்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், இறுதிப் போட்டியில் அணியை வழிநடத்துவேன் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை,” என்றார்.
இது ரோஹித் சர்மா தனது பெயரை சிறந்த கேப்டன்களின் பட்டியலில் பதிவு செய்ய ஒரு சிறந்த வாய்ப்பு.
ரோஹித் சர்மா சமீபத்தில், “இப்போது, உங்களுக்கு உங்கள் பக்கத்தில் கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை, அதிர்ஷ்டம் உங்களுக்கு உதவட்டும். நிச்சயமாக, நாங்கள் தைரியமாக விளையாடுவோம். அதிர்ஷ்டம் தைரியமானவர்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று நம்புகிறோம்,” என்று கூறியிருந்தார்.
இந்தியா 2013 சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதில் இருந்து ஐசிசி பட்டத்தை வெல்லவில்லை. இந்த நிலையில், ரோஹித் சர்மா மற்றும் அவரது கூட்டாளிகள் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புதிய வரலாற்றை உருவாக்க விரும்புகின்றனர்.
Source: BBC.com