Press "Enter" to skip to content

இந்தியாவின் உலகக்கோப்பை கனவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள்

பட மூலாதாரம், Getty Images

ஆமதாபாத்தில் இன்று (நவ. 19) உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டி, ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெறுகிறது.

அணி வீரர்களின் சிறப்பான பந்துவீச்சு மற்றும் மட்டையாட்டம் காரணமாக, தங்களை யாராலும் வெற்றி பெற முடியாது என்கிற இந்திய அணியின் நம்பிக்கை உச்சத்தில் இருப்பது போல் தெரிகிறது.

அதேபோன்று எதிரணியான ஆஸ்திரேலிய அணியும் லீக் போட்டிகளிலும், அரையிறுதியிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல ‘ஃபார்மில்’ இருக்கிறது.

இந்திய அணிதான் “நிச்சயமாக வெற்றி பெறும்” என கிரிக்கெட் ரசிகர்களும் நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.

ஆனால், கடந்த சில போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் சிலர் வெளிப்படுத்திய திறமையான ஆட்டத்தால், இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பைச் சிதைத்து, அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக ஆஸ்திரேலிய வீரர்கள் சிலர் இருப்பார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.

இந்தியா 12 ஆண்டுகளுக்குப் பிறகு நான்காவது முறையாக ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கூ இது எட்டாவது முறை.

இந்தியாவுக்கு சவாலான ஆஸ்திரேலிய வீரர்கள்

இந்தியா Vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பற்றிச் சொல்ல வேண்டுமானால், இந்த உலகக்கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் மட்டையாட்டம் வரிசையே அவர்களின் திறமைக்குச் சான்றாக உள்ளதைக் காணலாம்.

கடும் அழுத்தத்திற்கு இடையிலும் முன்னெப்போதும் இல்லாத ஆக்ரோஷத்துடன் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற கிளென் மேக்ஸ்வெல், ஆரம்பத்திலேயே தனது மட்டையாட்டம்கால் எதிரணியின் மன உறுதியைக் குலைத்த டேவிட் வார்னர் என, ஆஸ்திரேலியாவின் பேட்ஸ்மேன்கள் அதிக ஸ்கோர்களை குவித்தது மட்டுமின்றி சேஸிங்கின் அழுத்தத்தைக் கையாளும் திறனையும் நிரூபித்துள்ளனர்.

இந்த உலகக்கோப்பைத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முதல் 12 பேட்ஸ்மேன்களில் ஆஸ்திரேலிய வீரர்கள் மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் தனது அபாரமான மட்டையாட்டம் காரணமாக இந்த உலகக்கோப்பைத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். டேவிட் வார்னர் தான் விளையாடிய பத்து போட்டிகளில் 52.80 என்ற சராசரியில் 528 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

இதில் இரண்டு சதங்களும் இரண்டு அரைசதங்களும் அடங்கும். ஆக்ரோஷமான மட்டையாட்டம்கிற்கு பெயர் பெற்ற வார்னர், உலகக் கோப்பையில் அதிக ஓட்டத்தை குவித்தவர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார்.

போட்டியை புரட்டிப் போடும் திறமை

இந்தியா Vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

மேலும், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மிச்செல் மார்ஷ் இந்த உலகக்கோப்பையில் சிறப்பாக மட்டையாட்டம் செய்தார். அவர் விளையாடிய 9 போட்டிகளில் 53.25 என்ற சராசரியில் 426 ஓட்டங்கள் எடுத்துள்ளார். அதிக ஓட்டத்தை எடுத்தவர்கள் பட்டியலில் அவர் ஒன்பதாவது இடத்தில் உள்ளார். இந்த உலகக்கோப்பை தொடரில் இதுவரை இரண்டு சதங்கள் அடித்துள்ளார்.

இது தவிர, கிளென் மேக்ஸ்வெல் இந்தப் பட்டியலில் 12வது இடத்தில் உள்ளார். உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவின் இறுதி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இரட்டை சதம் அடித்து, கடினமான சூழலிலும் அணிக்கு வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுத் தந்தார்.

இந்த மறக்க முடியாத ஆட்டத்தைக் கொடுத்த மேக்ஸ்வெல், இந்தப் போட்டியில் இதுவரை 66 என்ற சராசரியுடன் 398 ஓட்டங்கள் எடுத்துள்ளார். தனது ஆக்ரோஷமான மட்டையாட்டம்கின் மூலம் எந்த நேரத்திலும் போட்டியை புரட்டிப் போடும் திறமை தன்னிடம் உள்ளது என்பதை அவர் நிரூபித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் எந்த அணியும் மேக்ஸ்வெல்லுடன் வார்னர் மற்றும் மார்ஷ் ஆடுகளத்தில் அதிக நேரம் இருக்கக்கூடாது என்று விரும்புவார்கள். இந்த அனைத்து வீரர்களும் எந்த எதிரணியின் பந்துவீச்சுத் தாக்குதலையும் அழிக்கும் திறன் உடையவர்கள் என்பதில் சந்தேகமில்லை.

இந்தியா Vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

மேலும், ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா, இந்தத் தொடரில் வெல்ல முடியாத பேட்ஸ்மேன்களை தனது சுழல் வலையில் சிக்க வைத்து பெவிலியனுக்கு அனுப்பியுள்ளார்.

அவர் பத்து போட்டிகளில் 22 மட்டையிலக்குடுகளை வீழ்த்தினார் மற்றும் உலகக்கோப்பைத் தொடரில் அதிக மட்டையிலக்கு எடுத்தவர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இறுதிப்போட்டியில் ஜம்பாவின் மேஜிக் ஆட்டத்தால், இந்திய மட்டையாட்டம் வரிசைக்கு சிக்கல் ஏற்படலாம்.

சளைக்காத இந்திய அணி

இந்தியா Vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு பலத்த சவாலை ஏற்படுத்தக்கூடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களைப் பற்றிப் பேசும்போது, இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களின் சாதனைகள் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.

மேலே குறிப்பிட்டுள்ள சிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் பட்டியலில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் இரண்டிலும் முதலிடத்தில் உள்ளனர். இதுவே இந்த உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியின் அபாரமான ஆட்டத்தை நிரூபிக்கிறது.

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 50 சதங்கள் அடித்த விராட் கோலி முதல் கேப்டன் ரோகித் சர்மா, ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற பேட்ஸ்மேன்கள் வரை, ஓட்டத்தை சேஸாக இருக்கட்டும் அல்லது அதிக ஸ்கோர்களாக இருக்கட்டும் இரண்டிலும் எதிரணியின் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தி எல்லா சூழ்நிலைகளிலும் ரன்களை குவித்துள்ளனர்.

உலகக்கோப்பைத் தொடரில் அதிக ஓட்டத்தை குவித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 101.57 என்ற சராசரியுடன் 711 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இதுமட்டுமின்றி, இதுவரை நடைபெற்ற அனைத்து உலகக்கோப்பை தொடர்களிலும், அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இந்தியா Vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

இந்தப் பட்டியலில் ரோகித் சர்மா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் முறையே 550 மற்றும் 526 ரன்களுடன் ஐந்தாவது மற்றும் ஏழாவது இடத்தில் உள்ளனர். இந்த சாதனை இந்திய மட்டையாட்டம் வரிசையின் வலிமையை துல்லியமாகச் சித்தரிக்கிறது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, உலகக்கோப்பைத் தொடரில் தனது மேஜிக் ஆட்டத்தின் மூலம் 6 போட்டிகளில் 23 மட்டையிலக்குடுகளை வீழ்த்தி அதிக மட்டையிலக்கு வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

அவரது பந்துவீச்சை கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் நிபுணர்கள் மட்டுமல்லாமல், இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் பாராட்டியுள்ளனர். முகமது ஷமியின் பந்துவீச்சு ‘மறக்க முடியாதது’ என்று அவர்கள் வர்ணித்துள்ளனர்.

அவரது சிறப்பான பந்துவீச்சுக்காக அவர் விளையாடிய 6 போட்டிகளில் மூன்றில் ‘ஆட்ட நாயகனாகவும்’ தேர்வு செய்யப்பட்டார். முகமது ஷமி தவிர, பும்ரா, சிராஜ், ஜடேஜா மற்றும் யாதவ் ஆகியோரும் உலகக்கோப்பை தொடரில் அவர்களின் அற்புதமான பந்துவீச்சுக்காக ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றனர்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »