பட மூலாதாரம், Getty Images
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியாவின் உலகக்கோப்பை கனவை சுக்குநூறாக நொறுக்கியது.
இந்த நிலையில் இந்தியாவின் தோல்வி குறித்தும் ஆஸ்திரேலியாவின் வெற்றி குறித்தும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் என்ன கூறுகிறார்கள்?
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர் X சமூக வலைதளத்தில் தான் கடந்த அக்டோபர் 12ம் தேதி ஆஸ்திரேலியா குறித்து பதிவிட்ட ட்வீட்டை பகிர்ந்துள்ளார். அதில், “ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா உடனான இந்தப்போட்டியில் தோல்வியுற்றால் இந்தத் தொடரில் மற்ற எல்லாப் போட்டிகளிலும் வெற்றி பெறுவார்கள்” எனத் தெரிவித்திருந்தார். அதை மீண்டும் பகிர்ந்து, “ஒரு மாதத்திற்கு முன்பே சொன்னேன்” என குறிப்பிட்டிருந்தார்.

பட மூலாதாரம், X
மற்றொரு பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் தான் கடந்த அக்டோபர் 21ம் தேதி பாகிஸ்தானை ஆஸ்திரேலியா வீழ்த்திய போது பதிவிட்ட ட்வீட்டில் சரியான நேரத்தில் ஆஸ்திரேலியா முன்னேறுகிறது. அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் எனத் தெரிவித்திருந்தார். அந்த ட்வீட்டை தற்போது மீண்டும் பகிர்ந்து “முன்பே கூறினேன். பேட் கம்மின்ஸிற்கு வாழ்த்துகள்.. ஆஸி..ஆஸி..ஆஸி..” எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், X
தோல்வி குறித்து ரோஹித் ஷர்மா கூறியது என்ன?
இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா கூறுகையில், “எங்களது ஆட்டம் போதுமானதாக இல்லை. ஆனால் ஒரு அணியாக நாங்கள் விளையாடிய விதம் குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன். நாங்கள் 20-30 ஓட்டங்கள் குறைவாக எடுத்திருந்தோம். லோகேஷ் ராகுல் மற்றும் விராட் கோலி மட்டையாட்டம் செய்யும் போது அவர்கள் பெரிய பார்ட்னெர்ஷிப் அமைக்க வேண்டும் என்று பேசியிருந்தனர் ஆனால் அந்த பெரிய பார்ட்னர்ஷிப்பை ஆஸ்திரேலியா அமைத்ததால் அவர்களால் வெற்றியைப் பெற முடிந்தது” என ரோஹித் தெரிவித்தார்.
மேலும், “நீங்கள் போர்டில் 240 ஓட்டங்கள் எடுத்திருக்கும் போது, உங்களுக்கு ஆரம்ப மட்டையிலக்குடுகள் தேவை, ஆனால் அவர்கள் விளையாடிய விதத்திற்காக டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லபுஷேனே ஆகியோருக்கு வாழ்த்துகள் மற்றும் இரவில் இந்த விளக்கொளியின் கீழ் விளையாடுவது மட்டையாட்டம்கிற்கு சாதகமாக இருந்தது” எனத் தெரிவித்தார்.
மூன்றாவது மட்டையிலக்குடிற்கு அடுத்து நான்காவது மட்டையிலக்குடையும் உடனே எடுத்திருந்தால் முடிவு வேறுமாதிரி இருந்திருக்கும் எனவும் ரோஹித் ஷர்மா தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
பேட் கம்மின்ஸ் கூறியது என்ன?
ஆஸ்திரேலியாவின் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில், “நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தை இந்த இறுதிப்போட்டிக்காக வைத்திருந்தோம் என்று நினைக்கிறேன். முழுத் தொடரிலும் நாங்கள் முதலில்தான் மட்டையாட்டம் செய்தோம். சேஸ் செய்வதற்கு இந்த சூழல் நன்றாக இருந்ததது. எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். எங்கள் அணி கொஞ்சம் வயதான வீரர்களை கொண்டதாக இருந்தாலும் தங்களது முழு ஆற்றலையும் களத்தில் வெளிப்படுத்தினர்” என கம்மின்ஸ் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “இந்த மட்டையிலக்குடில் 300 ஓட்டத்தை கடினமானதாக இருந்திருக்கலாம். ஆனால் அதை 240 ரன்களுக்குள் கட்டுப்படுத்துவது பிரமிக்க வைக்கும் முயற்சியாக இருந்தது. மார்னஸ் லபுஷேனே மற்றும் டிராவிஸ் ஹெட் பெரிய போட்டிகளில் சிறப்பாக விளையாடுகிறார்கள். மேலும் தேர்வாளர்கள் அவர்களை ஆதரித்தார்கள். அந்த முடிவிற்கு பலன் கிடைத்துள்ளது” என்றும் கம்மின்ஸ் கூறினார்.
உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் அதை நோக்கி செல்ல வேண்டும். காத்துக்கொண்டிருக்க முடியாது. இந்த இரவும் இந்த வருடமும் மறக்க முடியாததாக அமைந்திருப்பதாக கம்மின்ஸ் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
ரோஹித் ஷர்மா ஒரு அற்புதமான கேப்டன் – ட்ராவிட்
தோல்விக்கு பின்பு இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசுகையில், “ரோஹித் சர்மா ஒரு அற்புதமான கேப்டன். அவர் அணிக்காக நிறைய செய்துள்ளார். அவர் முன்மாதிரியாக வழிநடத்த விரும்பி அதைச் செய்தார். அவர் ஒரு சிறந்த தலைவர். ஒரு பேட்ஸ்மேனாக, அவர் எப்போதும் ஒட்டுமொத்த அணியையும் ஊக்குவிக்கிறார்”, என ராகுல் ட்ராவிட் தெரிவித்தார்.
மேலும் பேசிய ட்ராவிட், “இந்திய அணியின் பயிற்சியாளராக தொடர்ந்து இருப்பது குறித்து எல்லாம் நான் யோசித்தது இல்லை. இந்த உலகக்கோப்பையிலேயே நான் முழு கவனத்தையும் செலுத்தியிருந்தேன்” என தெரிவித்தார்.
மேலும், “பயமற்ற ஆட்டத்தை நாங்கள் ஆடினோம். முதல் பவர்ப்ளேவில் நாங்கள் 80 ஓட்டங்கள் அடித்தோம். மட்டையிலக்குடுகளை விரைவாக இழந்ததால் சுற்று திரும்ப கட்டமைக்க வேண்டியிருக்கும். அதைத்தான் நாங்கள் செய்தோம். நாங்கள் தற்காப்பு ஆட்டம் ஆடவில்லை” என ட்ராவிட் தெரிவித்தார்.
Source: BBC.com