Press "Enter" to skip to content

இந்தியப் பந்து வீச்சாளர்களை குறிவைத்து அடிக்க மேக்ஸ்வெல் வகுத்த வியூகம்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

உலகக் கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சாதிக்க முடியாத வெற்றியை, சாத்தியமாக்கிய மேக்ஸ்வெல் நேற்றைய இந்தியாவுக்கு எதிரான டி20 ஆட்டத்திலும் அதுபோன்ற வெற்றியை ஆஸ்திரேலிய அணிக்கு பரிசாக அளித்தார்.

கௌஹாத்தியில் நேற்று நடந்த இந்திய அணிக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றதற்கு ஒருநபரின் தனிப்பட்ட உழைப்புதான் காரணமாக இருக்குமென்றால் அது மேக்ஸ்வெல் மட்டையாட்டம் மட்டுமாகத்தான் இருக்கும்.

கடைசி இரு ஓவர்களில் 43 ஓட்டங்கள் அடிப்பது என்பது நிச்சயமாக சாத்தியமற்ற இலக்குதான். ஆனால், அதை நிகழ்த்திக் காட்டி மேக்ஸ்வெல் தனது அணியை வெற்றி பெற வைத்துள்ளார்.

இருவேறு பட்ட சதங்கள்

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி தன்னை உயிர்ப்புடன் வைத்துள்ளது. இந்தப் போட்டியோடு மேக்ஸ்வெல் உள்ளிட்ட உலகக் கோப்பையில் பங்கேற்ற சில ஆஸ்திரேலிய வீரர்கள் தாயகம் திரும்புகிறார்கள். அவர்களுக்குப் பதிலாக பிக்பாஷ் லீக்கில் ஆடிய சில வீரர்கள் புதிதாக தொடரில் அறிமுகமாகிறார்கள்.

இந்திய அணியின் கெய்க்வாட்டும், மேக்ஸ்வெல்லைப் போன்று நேற்றைய ஆட்டத்தில் கடைசி நேரத்தில் சதம் அடித்து 215 ஸ்ட்ரைக் ரேட்டில் பயணித்தாலும், மேக்ஸ்வெல்லின் சதத்தின் முன் கெய்க்வாட்டின் ஆட்டம் அடங்கிப் போனது. அதற்குக் காரணம் இருவரும் சதம் அடித்த சூழல்தான்.

கெய்க்வாட் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கியதே 18 ஓவர்களுக்குப் பிறகுதான். அதுவரை சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோரின் ஆதரவோடு நிதானமான ஆட்டத்தையே கடைபிடித்தார். இந்திய அணிக்கு மட்டையிலக்கு நெருக்கடி ஏதும் இல்லாததால் கெய்க்வாட் அழுத்தமின்றி பேட் செய்ய முடிந்தது.

இந்தியா  vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

துல்லியத் திட்டத்தை செயல்படுத்திய மேக்ஸ்வெல்

ஆனால், மேக்ஸ்வெல் களமிறங்கியபோது ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து மட்டையிலக்குடுகளை இழந்து தடுமாறியது. மேக்ஸ்வெல் களமிறங்கிய சிறிது நேரத்தில் ஸ்டாய்னிஷும் மோசமான ஃபார்ம் காரணமாக விரைவாக ஆட்டமிழந்தார்.

இதனால், அணியை ஒற்றை மனிதராக மீட்டெடுக்க வேண்டிய நிர்பந்தம் மேக்ஸ்வெலுக்கு ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல் வேகப்பந்துவீச்சாளர்கள் அனைவரையும் நடுப்பகுதி ஓவர்களில் குறிவைத்து ரன்களைச் சேர்த்தார்.

மேக்ஸ்வெல் களத்தில் நங்கூரமிட்டால் இந்திய அணி சேர்த்த 222 ஓட்டங்கள் வெற்றிக்கு உகந்தது இல்லை, பாதுகாப்பான ஸ்கோர் இல்லை என்பது அனைத்து வீரர்களுக்கும் தெரியும். இதனால், மேக்ஸ்வெல் ஆட்டத்தைக் கட்டுப்படுத்தவும், மட்டையிலக்குடை சாய்க்கவும் பல பந்துவீச்சாளர்களை கேப்டன் சூர்யகுமார் பயன்படுத்தியும் பயனில்லை.

இந்தியா  vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

மேக்ஸ்வெல் ஆட்டம் குறித்து சூர்யகுமார் கூறுகையில் “ மேக்ஸ்வெல்லின் மட்டையாட்டம் எங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. விரைவாக மேக்ஸ்வெலை ஆட்டமிழக்கச் செய்ய விரும்பினோம், அதுதான் எங்கள் திட்டமாக இருந்தது. அதிகமான பனிப்பொழிவு இருந்தால், நிச்சயம் 222 ரன்களை டிபெண்ட் செய்வது கடினமானது, பந்துவீச்சாளர்களால் நினைத்தமாதிரி பந்துவீசுவது கடினம் என்பது தெரியும். தேநீர் இடைவேளையின்போதுகூட நான் சகவீரர்களிடம் மேக்ஸ்வெல் குறித்துக் கூறுகையில் மேக்ஸ்வெலை விரைவாக ஆட்டமிழக்கச்செய்ய வேண்டும் என நினைத்தால் அது பைத்தியக்காரத்தனம் என்றேன்” என்று தெரிவித்தார்.

இந்தியா  vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

இந்திய அணியின் கைகளில் வெற்றி

ஏனென்றால், 18-ஆவது ஓவர் வரை ஆட்டம் இந்திய அணியின் கைகளில்தான் இருந்தது. ஆட்டம் குறித்த கணிணியின் கணிப்புகூட இந்திய அணியின் வெற்றிக்கு 95 சதவீதம் வாய்ப்பு இருப்பதாகவே தெரிவித்தது. ஆனால், அக்ஸர் படேல் வீசிய 19-வது ஓவரும், பிரசித் கிருஷ்ணா வீசிய 20-வது ஓவரையும் பயன்படுத்திய மேக்ஸ்வெல் ஆட்டத்தின் போக்கேயே மாற்றிவிட்டார்.

28 பந்துகளில் அரைசதம் அடித்த மேக்ஸ்வெல் அதன்பின் தனது மட்டையாட்டம் கியரை மாற்றிப் பயணித்து, அடுத்த 19 பந்துகளில் 50 ரன்களைச் சேர்த்து 47 பந்துகளில் சதம் அடித்தார். இதன் மூலம் டி20 போட்டிகளில் அதிவிரைவாக சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர்கள் வரிசையில் ஆரோன் பின்ச், இங்கிலிஸ் ஆகியோருடன் மேக்ஸ்வெலுடன் சேர்ந்தார். இதில் ஒற்றுமை என்னவென்றால் 3 வீரர்களுமே 47 பந்துகளில் சதம் அடித்தவர்கள்.

இதற்கு முன் 2016ம் ஆண்டு பல்லேகேலை நகரில் நடந்த இலங்கைக்கு எதிரானடி20 ஆட்டத்தில் மேக்ஸ்வெல் 49 பந்துகளில் அதிவிரைவாக சதம் அடித்தநிலையில் அந்த சாதனையை நேற்று அவரே முறியடித்தார். 2019ம் ஆண்டு பெங்களூருவில் இந்திய அணிக்கு எதிராக டி20 ஆட்டத்தில் 50 பந்துகளில் சதம் அடித்திருந்த மேக்ஸ்வெல் நேற்று 47 பந்துகளில் சதம் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா  vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

வெற்றியைத் தேடித்தந்தது எப்படி?

2016ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் ஷேன் வாட்ஸன் 124 ஓட்டங்கள் சேர்த்தும் தனது அணிக்கு வெற்றிதேடித் தரமுடியவில்லை. ஆனால், அதுபோன்றதொரு ஆட்டத்தை நேற்று மேக்ஸ்வெல் ஆடவில்லை. கடைசிவரை களத்தில் நங்கூரமிட்ட மேக்ஸ்வெல், ஒவ்வொரு ஷாட்டையும் தேர்ந்தெடுத்து, திட்டமிட்டு ஆடி ரன்களைச் சேர்த்தார்.

6-வது சுற்றில்தான் மேக்ஸ்வெல் களமிறங்கினார். அப்போது 14.2 ஓவர்களில் ஆஸ்திரேலிய வெற்றிக்கு 157 ஓட்டங்கள் தேவை, இது மிகப்பெரிய இலக்கு என்பது அப்போதே மேக்ஸ்வெலுக்கு தெரிந்துவிட்டது. இதனால், பிரசித் கிருஷ்ணாவின் 8-வது ஓவரை குறிவைத்த மேக்ஸ்வெல் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என அப்போதே தனது திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கினார். டிம் டேவிட், ஸ்டானிஷ் ஆட்டமிழந்தது மேக்ஸ்வெலுக்கு மேலும் நெருக்கடி அளித்தது.

அது மட்டுமல்லாமல் நடுப்பகுதி ஓவர்களில் பிஷ்னோய், அக்ஸர் படேலின் சுழற்பந்துவீச்சும் மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்துக்கு கடிவாளம் போட்டது வெற்றிக்கு தேவைப்படும் ரன்ரேட்டை அதிகப்படுத்தியது. 6 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு 86 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அதாவது ஓவருக்கு 13 ஓட்டங்கள் தேவை என்ற நிலை இருந்துத.

ஆனால், இவை அனைத்தையும் கடந்துதான் மேக்ஸ்வெல் தனது அதிரடி ஆட்டத்தை செயல்படுத்தினார். அதிலும்கூட 18-வது ஓவரை பிரசித் கிருஷ்ணா கட்டுக்கோப்பாக வீசி 6 ஓட்டங்கள் கொடுத்தது ஆஸ்திரேலியாவின் வெற்றியை பறித்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். கடைசி 2 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு 43 ஓட்டங்கள் தேவைப்பட்டது, இந்த இலக்கை அடைவது அவ்வளவு சுலபமானது அல்ல என்று ரசிகர்கள் எண்ணினர்.

இந்தியா  vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

வெற்றியைத் தவறவிட்ட இஷான் கிஷனின் தவறுகள்

ஆனால், அக்ஸர் படேல் வீசிய 19-வது ஓவர் பெரிய திருப்பத்தை ஆஸ்திரேலிய அணிக்கு அளித்தது. இஷான் கிஷன் செய்த இரு தவறுகள் 12 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு தாரை வார்த்தது. இந்த ரன்களை இந்திய அணி சேமித்திருந்தால், கடைசி சுற்றில் 33 ரன்களை ஆஸ்திரேலிய அணி அடிக்க வேண்டியிருந்திருக்கும், தொடரை இந்திய அணி வென்றிருக்கும்.

அக்ஸர் படேல் வீசிய 19-வது சுற்றில் 4வது பந்தில் இஷான் கிஷன் செய்த தவறால் நோபால் அறிவிக்கப்பட்டு ப்ரீஹிட்டில் மேத்யூ வேட் சிக்ஸர் அடித்ததும் கடைசிப்பந்தை பைஸ் மூலம் இஷான் கிஷன் 5 ஓட்டங்கள் கோட்டைவிட்டதும் ஆஸ்திரேலிய வெற்றிக்கு பெரும்பகுதி உதவியது, மேக்ஸ்வெல் பணியை எளிதாக்கியது.

இந்தியா  vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

மேக்ஸ்வெல்லின் மரண ஓவர் மாயாஜாலம்

கடைசி சுற்றில் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு 21 ஓட்டங்கள் தேவை, அதிலும் 4 பந்துகளில் 16 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில்தான் மேக்ஸ்வெல் ஸ்ட்ரைக்கிற்கு வந்தார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தைப் போல், இந்த முறையும் ஏதேனும் மாயஜாலத்தை நிகழ்த்துவார் மேக்ஸ்வெல் என்ற அச்சம் இந்திய வீரர்களிடம் இருந்தது. ஆனாலும், 16 ரன்களை அடிப்பது சாத்தியமில்லாதது என்றும் ரசிகர்கள் எண்ணினர். ஆனால் அனைவரின் கணிப்பையும் மேக்ஸ்வெல் பொய்யாக்கி, ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

பிரசித் கிருஷ்ணாவின் கடைசி சுற்றில் 3-வது பந்திலிருந்து மேக்ஸ்வெல் ஆட்டத்தைக் கையில் எடுத்தார். 3-வது பந்தில் ஆப்-சைடில் சிக்ஸர் விளாசிய மேக்ஸ்வெல், அடுத்ததாக 4-வது பந்தில் டீப் தேர்டு திசையில் ஒரு பவுண்டரி, 5-வது பந்தில் டீப் மிட்மட்டையிலக்குடில் ஒரு பவுண்டரி, கடைசிப் பந்தில் ஸ்ட்ரைட் திசையில் ஒரு பவுண்டரி என ஹாட்ரிக் பவுண்டரி விளாசி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

யாரும் எதிர்பாராத வெற்றியை, நினைத்துக் கூட பார்க்க முடியாத வெற்றியை மேக்ஸ்வெல் சாத்தியமாக்குவார் என யாரும் கணிக்கவில்லை. கடைசி இரு ஓவர்களில் 41 ரன்களைத் தடுக்க செய்யமுடியாமல் இந்திய அணியிடம் இருந்து வெற்றியை மேக்ஸ்வெல் பறித்துவிட்டார்.

இந்தியா  vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்திரேலியா சாதனை

கடைசி சுற்றில் அதிக ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்ற வரிசையில் ஆஸ்திரேலியா 21 ஓட்டங்கள் சேர்த்து வெற்றிபெற்று சாதனை படைத்தது. இதற்கு முன் கடைசி சுற்றில் 19 ஓட்டங்கள் சேர்த்து 2016ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக மேற்கிந்தியத்தீவுகள் அணிதான் வெற்றி பெற்றிருந்தது. அதை ஆஸ்திரேலிய அணி மேக்ஸ்வெல் ஆட்டத்தால் முறியடித்தது.

டி20 போட்டியில் 4 சதங்களை விளாசி, மேக்ஸ்வெல், ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்தார். ரோஹித் சர்மா 140 பந்துவீச்சு சுற்றுஸில் செய்த சாதனையை, மேக்ஸ்வெல் 92 பந்துவீச்சு சுற்றுஸில் எட்டி சாதனை படைத்துள்ளார்.

மேக்ஸ்வெல் டி20 போட்டியில் அடித்த 4 சதங்களில் 3 சதங்கள், சேஸிங் மூலம் அடித்தவையாகும். அதிலும் 4-வது இடத்தில் களமிறங்கி மேக்ஸ்வெல் இந்த சதத்தை அடித்துள்ளார்.

இந்தியா  vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

மேக்ஸ்வெல்லின் வியூகம் என்ன?

மேக்ஸ்வெல் தனது திட்டத்தை செயல்படுத்தியது எப்படி என்பது குறித்துக் கூறுகையில் “கடைசி ஓவர்வரை களத்தில் நின்றால், ஆட்டம் எங்கள் பக்கம் திரும்பும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நடுப்பகுதி ஓவர்களில் எனக்கு வெற்றி மீது நம்பிக்கையில்லாமல்தான் இருந்தது. குறிப்பிட்ட சில பந்துவீச்சாளர்களை குறிவைக்க நாங்கள் திட்டமிட்டோம். அக்ஸர் படேலுக்கு ஒரு ஓவர் மீதம் இருந்ததால், அந்த ஓவரை மேத்யூ சிறப்பாகப் பயன்படுத்தி எனக்குரிய நெருக்கடியைக் குறைத்தார்.” என்று தெரிவித்தார்

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »