Press "Enter" to skip to content

மிகச்சிறிய நாடான கத்தார் போரில் மத்தியஸ்தம் செய்வது எப்படி? இஸ்ரேல் பிரதமர் பேச்சால் சர்ச்சை

பட மூலாதாரம், ABIR SULTAN/POOL/EPA-EFE/REX/SHUTTERSTOCK

காஸா போரில் கத்தாரின் பங்கு ‘சர்ச்சைக்குரியது’ என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். இந்த கருத்து தங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதாக கத்தார் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களின் குடும்பங்களிடம் நெதன்யாகு “நான் கத்தாருக்கு நன்றி சொல்வதை நீங்கள் கேட்கவில்லை” என்று கூறும் காணொளியை இஸ்ரேலிய தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

“அவர்களுக்கு நன்மைகள் உள்ளன. ஏனென்றால் அவர்கள் [ஹமாஸுக்கு] நிதியுதவி அளிக்கிறார்கள்,” என்று அவர் மேலும் கூறுகிறார்.

இந்த கருத்துகள் உண்மையாக இருந்தால், அவை “பொறுப்பற்றவை” ஆனால் “ஆச்சரியமல்ல” என்று கத்தார் கூறியுள்ளது.

சிறிய வளைகுடா நாடான எமிரேட் 1990 களில் இருந்து இஸ்ரேலுடன் உயர்மட்ட தொடர்புகளைக் கொண்டுள்ளது. ஆனால் இரு நாடுகளும் ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக ராஜதந்திர உறவுகளை கொண்டதில்லை.

இஸ்ரேல், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்பட்ட ஹமாஸின் அரசியல் தலைவர்களுக்கு ஆதரவு அளித்து வரும் கத்தார், நீண்ட காலமாக பாலத்தீன கோரிக்கைக்கு ஆதரவளித்து வருகிறது.

Israel- Qatar controversy

பட மூலாதாரம், Getty Images

2006-ம் ஆண்டு தேர்தல்களில் ஹமாஸ் வெற்றி பெற்றதில் இருந்து இஸ்ரேல் மற்றும் எகிப்தின் பொருளாதார தடைகளை எதிர்கொண்டு வருகிறது காஸா.

அடுத்த ஆண்டு பாலத்தீன அதிகார (PA) படைகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றி, ஹமாஸ் காஸாவில் தனது அதிகாரத்தை வலுப்படுத்திய போது இந்த தடைகளும் முடக்கமும் கடுமையாக்கப்பட்டன.

காஸாவுக்கு கத்தார் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் உதவியை வழங்கி வருகிறது.

2018-ம் ஆண்டு முதல், காஸாவில் ஹமாஸ் நடத்தும் அரசாங்கத்தில் பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்களின் ஊதியங்களை வழங்கவும், ஏழை குடும்பங்களுக்கு நிதி உதவி செய்யவும், பிராந்தியத்தின் ஒரே மின் உற்பத்தி நிலையத்திற்கு எரிபொருள் விநியோகிக்க நிதியளிக்கவும் இஸ்ரேலிய அரசாங்கங்கள் கத்தாரை அனுமதித்துள்ளன. இந்த நிதி மனிதாபிமான நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது என்று கத்தார் வலியுறுத்துகிறது.

இந்த கொள்கை இஸ்ரேலுக்குள் சர்ச்சையைத் தூண்டியது. விமர்சகர்கள் ஹமாஸ் அதிகாரத்தில் இருக்கவும் அதன் இராணுவ நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கவும் உதவுவதாக எச்சரித்தனர்.

இந்த கொள்கை இஸ்ரேலுக்குள் சர்ச்சைகளை கிளப்பியது. ஹமாஸ் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்கவும், அதன் ராணுவ நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தவும் இது உதவும் என்று விமர்சிக்கப்பட்டது.

Israel- Qatar controversy

பட மூலாதாரம், Reuters

கடந்த 15 ஆண்டுகளில் ஒரு முறை தவிர மற்ற எல்லா முறைகளிலும், ஆட்சிக்கு வந்த நெதன்யாகு, இஸ்ரேல் மீதான தாக்குதல்களைத் தடுக்கவும், காஸாவில் மனிதாபிமான பேரழிவைத் தடுக்கவும் இது ஒரு வழி என்று கூறினார் .

அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீதான எல்லை தாண்டிய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஹமாஸூக்கு தன்னை பலப்படுத்திக் கொள்வதற்கான நிதி பெறுவதற்கு நெதன்யாகு வழிவகுத்தார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், இவற்றை, ஒரு “பெரிய பொய்” என்று அவர் நிராகரித்தார்.

ஹமாஸை அழிக்கும் நோக்கத்துடன் காஸாவில் ஒரு பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது இஸ்ரேல். இந்த சண்டையில் 25,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக காஸாவில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹமாஸுடனான தனது உறவுகளைப் பயன்படுத்தி, நவம்பர் இறுதியில் , ஒரு வார கால போர் நிறுத்தத்திற்கு கத்தார் உதவியது. அப்போது, இஸ்ரேலிய சிறைகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீனர்களை இஸ்ரேலும், பதிலாக 105 இஸ்ரேலிய மற்றும் வெளிநாட்டு பணயக்கைதிகளை ஹமாஸும் விடுவித்தன.

Israel- Qatar controversy

பட மூலாதாரம், Getty Images

கத்தார் பற்றி இஸ்ரேல் பிரதமர் கூறியது என்ன?

காஸாவின் மனிதாபிமான நெருக்கடி மோசமடைந்து வருவதாலும், மீதமுள்ள பணயக்கைதிகளை விடுவிக்க இஸ்ரேலிய அரசாங்கத்துக்கு உள்நாட்டு அழுத்தம் அதிகரித்து வருவதாலும், எமிரேட் பல வாரங்களாக ஒரு புதிய போர் நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்ய முயற்சித்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை, இஸ்ரேலிய சேனல் 12 தொலைக்காட்சி, பிணைக்கைதிகளின் குடும்பங்களிடம் நெதன்யாகு கூறிய ஒரு பதிவை வெளியிட்டது: “நான் கத்தாருக்கு நன்றி சொல்வதை நீங்கள் கேட்கவில்லை. கவனித்தீர்களா?”

“ஏன்? ஏனென்றால் என்னைப் பொறுத்தவரை இது அடிப்படையில் ஐ.நா அல்லது செஞ்சிலுவைச் சங்கத்தில் இருந்து வேறுபட்டதல்ல. ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில் அது இன்னும் சிக்கலானது.

ஆனால் பணயக் கைதிகளை வீட்டிற்கு அழைத்து வர உதவும் எவரையும் இப்போதே பயன்படுத்த நான் தயாராக இருக்கிறேன்” என்று அவர் மேலும் கூறினார்.

பிணைக்கைதிகளுக்கு ஆதரவளிக்கவோ அல்லது அவர்களை விடுவிக்க உதவவோ ஐ.நா மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் போதுமான உதவிகளை வழங்கவில்லை என்று இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

கத்தாரால் ஏன் உதவ முடியும் என்றால், ஹமாஸ் மீது கத்தார் செல்வாக்கு செலுத்துகிறது. ஏன் அவர்களால் செல்வாக்கு செலுத்த முடிகிறது. ஏனென்றால், கத்தார் அவர்களுக்கு நிதி வழங்குகிறது.” என்று கூறினார்.

Israel- Qatar controversy

பட மூலாதாரம், Reuters

இஸ்ரேல் vs கத்தார்

புதன்கிழமை இரவு, கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜீத் அல்-அன்சாரி X தளத்தில், “இந்த கருத்துகள் உண்மையானால், அவை பொறுப்பற்றவை மற்றும் அப்பாவி உயிர்களைக் காப்பாற்றும் முயற்சிகளுக்கு தடையானவை. ஆனால் இதில் ஆச்சரியம் ஏதும் இல்லை”

“கடந்த ஆண்டு 100 க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை விடுவிக்க வழிவகுத்த ஒரு வெற்றிகரமான மத்தியஸ்தத்தைத் தொடர்ந்து, இஸ்ரேலிய அமைப்புகள் உட்பட இரு தரப்பினருடனும் கத்தார் பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளது. ஒரு புதிய பணயக்கைதிகள் ஒப்பந்தத்தை உருவாக்கவும், காஸாவிற்குள் மனிதாபிமான உதவிகளை உடனடியாக அனுமதிக்கவும் முயன்று வருகிறது. நெதன்யாகு “தனது அரசியல் லாபத்துக்காக” மத்தியஸ்த முயற்சிகளை குறைத்து மதிப்பிடுவதாக தெரிகிறது” என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த இஸ்ரேலிய நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச், “கத்தார் பயங்கரவாதத்தை ஆதரித்து நிதியளிக்கும் நாடு. ஹமாஸால் இஸ்ரேலிய குடிமக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு பெரும்பாலும் பொறுப்பாகும்.” என்று X தளத்தில் பதிவிட்டிருந்தார்

“ஒன்று மட்டும் நிச்சயம்: போர் முடிந்த மறுநாள் காஸாவில் கத்தார் ஒரு துளி கூட தலையிடாது” என்று அவர் மேலும் கூறினார்.

கத்தார் வெளியுறவு அமைச்சகம் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில், காஸாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளை விடுவிக்கும் வகையில் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயற்சிக்க அமெரிக்க அதிபர் பைடன் சிஐஏ இயக்குநரை அனுப்புகிறார் என்று பிபிசியின் அமெரிக்க கூட்டாளி சிபிஎஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

வில்லியம் பர்ன்ஸ் பிரான்சில் கத்தார் பிரதமர் மற்றும் இஸ்ரேலின் உளவுத்துறையான மொசாத்தின் இயக்குநர்களை சந்திக்க உள்ளார்

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »