Press "Enter" to skip to content

சச்சின் தாஸ்: இந்திய கிரிக்கெட்டின் இன்னொரு டெண்டுல்கரா? ஒரு ஷாட்டுக்காக 1000 பந்துகளை வீசி பயிற்சி பெறும் இவரது சிறப்பு என்ன?

பட மூலாதாரம், Getty Images

சச்சின் டெண்டுல்கருக்கும் இந்திய கிரிக்கெட்டுக்கும் இடையே மேலும் ஒரு முடிவில்லாத உறவு உருவாகியுள்ளது.

கிரிக்கெட் உலகில் சச்சின் டெண்டுல்கர் விட்டுச் சென்ற முத்திரை அனைவருக்கும் தெரியும். ஆனால் இப்போது சச்சின் என்ற மற்றொரு வீரர் பிரபலமாகி வருகிறார். அவர்தான் சச்சின் தாஸ்.

19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள சச்சின் தாஸ், உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்திய அணியை அழைத்துச் சென்றதில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார்.

மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதியைச் சேர்ந்தவர் சச்சின் தாஸ். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 96 ஓட்டங்கள் எடுத்து மேட்ச் வின்னிங் சுற்று ஆடினார்.

இந்திய அணி 32 ரன்களுக்கு 4 மட்டையிலக்குடுகளை இழந்திருந்தபோது, கேப்டன் உதய் சஹாரானுடன் இணைந்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டார்.

சச்சின் தாஸ்

பட மூலாதாரம், SANJAY DHAS

பிறப்பதற்கு முன்பே கிரிக்கெட் வீரராக்க முடிவு

அவரது தந்தை சஞ்சய் தாஸ் பிபிசி மராத்தியுடன் பேசும்போது, “சச்சின் தாஸ் பிறப்பதற்கு முன்பே அவரை கிரிக்கெட் வீரராக்க வேண்டும்,” என்று முடிவு செய்திருந்ததாகக் கூறினார். இந்த முடிவுக்கு சச்சின் தாஸின் தாயார் எதிர்ப்பு தெரிவித்தாராம்.

சஞ்சய் தாஸ் சுகாதாரத் துறையில் பணிபுரிகிறார், அவரது மனைவி ஒரு காவல் துறை அதிகாரி.

“பையன் நன்றாகப் படிப்பவன். அவனது கவனத்தை திசை திருப்ப வேண்டாம். மீண்டும் யோசியுங்கள் என்று சச்சினின் அம்மா என்னிடம் கூறுவார். இந்த விஷயத்தில் நாங்கள் வாதிடுவோம். ஆனால் எனது எண்ணம் உறுதியாக இருந்தது. அவருடைய ஆட்டத்தை பார்த்த பிறகு, அவன் சாதிப்பான் என்று நான் நம்பினேன்,” என்றார் சஞ்சய் தாஸ்.

2005-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதி பிறந்த சச்சின், சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் விளையாடி வருகிறார். படிப்பிலும் சிறந்தவர். எனவே அவர் தனது படிப்பை முடித்துவிட்டு வேறு ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட வேண்டும் என்று அவரது தாயார் விரும்பினார்.

சச்சின் தாஸ்

பட மூலாதாரம், SANJAY DHAS

சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகர்

“நான் மக்கள் விரும்பத்தக்கதுடர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகர்,” என்கிறார் சச்சின் தாஸின் தந்தை சஞ்சய் தாஸ்.

“அதனால்தான் எனக்கு ஒரு மகன் பிறந்ததும் சச்சின் என்று பெயர் வைத்தேன்”

“சச்சின் என்ற பெயரில் பெரும் சக்தி இருக்கிறது. அவரது ஆசிர்வாதத்தை பெயர் வடிவில் சச்சின் பெற்று சிறப்பாக செயல்படுவது போல் தெரிகிறது,” என்கிறார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் நேபாளத்துக்கு எதிராகவும் சச்சின் சதம் அடித்துள்ளார்.

“முதலில் சில போட்டிகளில், கடைசி ஓவர்களில்தான் விளையாட முடிந்தது. நேபாளத்திற்கு எதிராக, அவர் விளையாட அதிக பந்துகள் கிடைத்தன. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார்,” என்றார் சஞ்சய்.

சச்சின் தாஸ்

பட மூலாதாரம், SANJAY DHAS

கேதார் ஜாதவ் கொடுத்த வாய்ப்பு

மகாராஷ்டிரா பிரீமியர் லீக்கில் பெற்ற அனுபவம்தான் தனது மகனின் வெற்றிக்கு முக்கியமானது என்று சச்சினின் தந்தை சஞ்சய் தாஸ் கூறுகிறார்.

இந்த போட்டியில், கோலாப்பூர் டஸ்கர்ஸ் அணியின் கேப்டனும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான கேதார் ஜாதவ், சச்சின் தாஸுக்கு அணியில் வாய்ப்பளித்ததாக அவர் கூறுகிறார்.

கேதார் ஜாதவ், அங்கித் பாவ்னே போன்ற சீனியர்களுடன் உடைஸிங் ரூமைப் பகிர்ந்து கொண்டது சச்சினுக்கு மிகவும் பயன் அளித்ததாக அவர் கூறுகிறார்.

“இந்த அணியுடன் சச்சின் ஒன்றரை மாதங்கள் பயிற்சி செய்தார். குறிப்பாக சீனியர்களுடன். அவர்கள் மிகுந்த நம்பிக்கையை அளித்தனர். சச்சினுக்கு எல்லாம் மாறியது.”

சச்சின் தாஸ்

பட மூலாதாரம், Getty Images

ஆயிரக்கணக்கான பந்துகளை வீசி பயிற்சி

தனது மகனின் வெற்றிக்கான பெருமையை பயிற்சியாளர் ஷேக் அசாருக்கு வழங்குகிறார் சஞ்சய் தாஸ். சச்சின் அவரிடம் சுமார் 15 ஆண்டுகள் பயிற்சி எடுத்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் பீட் நகரில் (Beed) நான்கு வயதில் சச்சினின் பயிற்சி தொடங்கியது.

“இதுவரை கிரிக்கெட்டில் சச்சின் என்ன கற்றுக்கொண்டாரோ, அனைத்தையும் அசார் சாரிடம் இருந்துதான் கற்றுக்கொண்டார்,” என்கிறார் சஞ்சய் தாஸ்.

“சச்சினின் பயிற்சி ஒழுங்கால்தான் இந்தச் சாதனையைச் செய்ய முடிந்தது. பயிற்சியின் போது சச்சின் சலிப்படையவில்லை,” என்று அசார் கூறுகிறார்.

“சச்சின் நான்கு வயதிலிருந்தே பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். கிரிக்கெட் கேம்ப்களுக்காக பிற நகரங்களுக்குச் செல்வதைத் தவிர, அவர் பீட் நகரில் எல்லா நேரமும் பயிற்சி செய்தார். தினமும் ஆறு முதல் ஏழு மணி நேரம் வரை தீவிர பயிற்சி செய்தார்.”

ஒவ்வொரு ஷாட்டையும் தவறாமல் ஆடுவதற்காக, சச்சின் அந்த ஷாட்டை ஆயிரக்கணக்கான பந்துகளை வீசச் செய்து பயிற்சி செய்தார் என்று பயிற்சியாளர் அசார் கூறுகிறார்.

சச்சினுக்கு 12 வயதாக இருந்தபோது, சில காரணங்களால் அவருக்கு 14 வயதுக்குட்பட்ட அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பயிற்சியாளர் கூறுகிறார். அந்த நேரத்தில் அவர் மிகவும் வருத்தமடைந்தார், ஆனால் அதன் பிறகு அவர் நிறைய பயிற்சி செய்து சிறப்பாக ஆடினார். அதன் பிறகு அவருக்கு பின்னடைவே இல்லை என்று பயிற்சியாளர் கூறுகிறார்.

சச்சின் தாஸ்

பட மூலாதாரம், Getty Images

சச்சின் சிக்சர் அடித்தபோது பேட்டை சோதனையிட்ட நடுவர்

சச்சின் தாஸின் மட்டையாட்டம் நுட்பம் நன்றாக இருப்பதாக நிபுணர்கள் புகழ்கிறார்கள். களத்தில் பெரிய ஹிட் அடிப்பதிலும் பெயர் பெற்றவர்.

“அவர் மிக அதிக சிக்ஸர்களை அடிப்பார், அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், அவர் பந்தை எல்லைக்கு வெளியே அடிப்பார்,” என்கிறார் அசார்.

ஒருமுறை, 16 வயதுக்குட்பட்டோருக்கான ஒரு போட்டியில், சச்சின் பல வானுயர சிக்ஸர்களை அடித்து சதம் அடித்ததாக அவர் சஞ்சய் கூறுகிறார்.

“அப்போது சச்சினின் உடல் அவ்வளவு வலுவாக இல்லாததால், அவரால் எப்படி இவ்வளவு பெரிய சிக்ஸரை அடிக்க முடியும் என்று நடுவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. நடுவர் வந்து அவரது பேட் விதிகளின்படி உள்ளதா இல்லையா என்பதை சரிபார்த்தார்,” என்று சஞ்சய் தாஸ் கூறினார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில், இதுபோன்ற ஷாட்கள் ஒவ்வொரு எதிரணியையும் திகைக்கச் செய்கின்றன.

சச்சின் இறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு உலகக் கோப்பையை அணிக்காக வெல்ல வேண்டும், மேலும் சீனியர் அணியில் இடம் பெற வேண்டும் என்று சஞ்சய் தாஸ் விரும்புகிறார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »