பாலிவுட் இயக்குனர் மீது பாலியல் புகார்? கோலியின் காதலி அதிரடி!

பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் காபி வித் கரண் என்ற டிவி நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் அனுஷ்கா சர்மா மற்றும் கத்ரீனா கைஃப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் தன்னை கண்ட இடத்தில் தொட்டதாக நடிகை அனுஷ்கா சர்மா இந்த நிகழ்ச்சியில் புகார் தெரிவித்துள்ளார்.
 

கரண் ஜோஹார் இயக்கத்தில் அனுஷ்கா ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் போது அனுஷ்கா மீது தனக்கு ஈர்ப்பு ஏற்பட்டதாக கரண் தெரிவித்தார்.
 

ஆனால், அனுஷ்கா சர்மா, சில சமயங்களில் கரண் என்னை கண்ட கண்ட இடத்தில் தொட்டுள்ளார் எனவே நான் கரண் மீது பாலியல் தொல்லை புகார் அளிக்கலாம் என்று இருந்தேன் என்றார். 
 

என்னை மட்டும் அல்ல நடிகை ஜாக்குலினையும் கண்ட இடத்தில் தொட்டுள்ளார் கரண் என அனுஷ்கா தெரிவித்தார். 
 

சட்ட விஷயங்களை பின்னர் ஒரு நாளில் மெதுவாக பேசிக் கொள்ளலாம் என்று கூறி சமாளித்து நிகழ்ச்சியை தொடர்ந்தார் கரண்.

Source: Webdunia.com