வடசென்னை இரண்டு ஷெட்யூல்ட் முடிந்தது

வடசென்னை இரண்டு ஷெட்யூல்ட் முடிந்தது

வெற்றிமாறனின் வடசென்னை படத்தின் இரண்டு ஷெட்யூல்ட்கள் முடிந்துள்ளன. படம் ட்ராப், தள்ளிப் போகிறது என்ற வதந்திகளுக்கு இதன்மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வெற்றிமாறனின் கனவுப்படமான வடசென்னை மூன்று பாகங்களாக தயாராகிறது. தனுஷ், அமலா பால், விஜய் சேதுபதி,  டேனியல் பாலாஜி போன்ற பலர் நடிக்கின்றனர். முதல் ஷெட்யூல்டில் விஜய் சேதுபதி கலந்து கொண்டார்.

வடசென்னை தற்காலிகமாக கைவிட்டதாகவும், விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகியதாகவும் தகவல் வெளியானது.  விசாரணை படம் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டதால் படத்தை பிரமோட் செய்ய வெற்றிமாறன் 3 மாதங்கள்  யுஎஸ்ஸில் தங்கியிருந்தார். அதன் காரணமாகவே படம் ட்ராப் என்று செய்திகளில் வெளியானது.

தற்போது இரண்டு ஷெட்யூல்ட்கள் முடிந்த நிலையில், தனுஷ் கால்ஷீட் தந்ததும் 3 -வது கட்ட படப்பிடிப்பை தொடங்க  உள்ளார்.

செய்திகள்

Source: Webdunia.com

Author Image
murugan