மீண்டும் படம் இயக்கும் பாடலாசிரியர் பா.விஜய்

மீண்டும் படம் இயக்கும் பாடலாசிரியர் பா.விஜய்

பாடலாசிரியராக கொடிகட்டி பறந்தபோது ஹீரோவாக களமிறங்கினார் பா.விஜய். அவர் நடித்த எந்தப் படமும் வெற்றி  பெறவில்லை. கடைசியில் அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி நடிக்கவும் செய்தார். அப்படியும் தோல்வி.

பாடலும் அதிகம் எழுதவில்லை, படத்திலும் நடிக்கவில்லை. என்னவானார் பா.விஜய் என்று நினைத்த நேரம் மறுபடியும்  புதுத்தெம்புடன் படம் இயக்கி நடிக்கிறார்.

இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க கொல்கத்தாவைச் சேர்ந்த மேகலி என்பவரை ஒப்பந்தம் செய்துள்ளார் விஜய். படத்தின்  முதல் ஷெட்யூல்ட் முடிவடைந்த நிலையில், இரண்டாவது ஷெட்யூல்டுக்கு கிளம்ப படக்குழு தயாராகி வருகிறது.

செய்திகள்

Source: Webdunia.com

Author Image
murugan