குடும்ப உறவுகளை அவமானப்படுத்துவதாக குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலீஸ் கமி‌ஷனரிடம் புகார்

குடும்ப உறவுகளை அவமானப்படுத்துவதாக குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலீஸ் கமி‌ஷனரிடம் புகார்

டிவி நிகழ்ச்சிகள் மூலம் குடும்ப உறவுகளை அவமானப்படுத்துவதாக குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.

சென்னை ஐகோர்ட்டு வழக்கறிஞர் பாலாஜி சென்னை போலீஸ் கமி‌ஷனரிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது- தொலைக்காட்சிகளில் ‘நிஜங்கள்’, ‘சொல்வதெல்லாம் உண்மை’ ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இவை மனித உரிமைகள் மற்றும் குழந்தைகள் உரிமைகளை மீறும் நிகழ்ச்சிகளாக உள்ளன.

வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களை ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்று சுப்ரீம்கோர்ட்டு 2011-ம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது. அதை மீறி இந்த நிகழ்ச்சிகளில் குழந்தைகளை காட்டுகிறார்கள். இந்த நிகழ்ச்சிகளில் மோசமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். கவுன்சிலிங் கொடுப்பவர்கள் அதற்கான முறையான படிப்பை முடித்தவர்களாக இருக்க வேண்டும்.

இந்த சமூகம், கலாச்சாரம், ஒழுக்கத்துக்கு எதிராக இந்த நிகழ்ச்சிகள் உள்ளன. குழந்தைகள், சிறுவர்கள் பாதுகாப்பு சட்டங்களுக்கு எதிராக இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிகளை நடத்தும் நடிகைகள் குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் மோசமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். குடும்ப கலாசாரம், உறவுகளை அவமானப்படுத்தும் இந்த நிகழ்ச்சிகளை தடை செய்யவேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராகவும், இந்திய சட்டங்களுக்கு எதிராகவும் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Source: Maalaimalar

Author Image
murugan