ஜாக்சன் துரை இயக்குனரின் ராஜா ரங்குஸ்கி

பர்மா, ஜாக்சன் துரை படங்களை இயக்கிய தரணீதரனின் புதிய படத்துக்கு ராஜா ரங்குஸ்கி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் நாயகியாக பூஜா தேவரியா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.  இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 2-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

மெட்ரோ படத்தில் நாயகனாக அறிமுகமான சிரிஷ் இதில் நாயகனாக நடிக்கிறார். பர்மா டாக்கீஸ் மற்றும் வாசன் தயாரிப்பு  நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன.

செய்திகள்

Source: Webdunia.com