9 வருடங்களுக்குப் பிறகு தெலுங்கு படத்தில் குஷ்பு

9 வருடங்களுக்குப் பிறகு தெலுங்கு படத்தில் குஷ்பு

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் கொடி கட்டி பறந்தவர் குஷ்பு. இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

பின்னர் அரசியலில் இறங்கினார். இதனால் திரைப்படங்களில் தீவிர கவனம் செலுத்தவில்லை. தற்போது ஜேம்ஸ் வசந்தன் இயக்கும் தமிழ் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், 9 வருடங்களுக்குப் பிறகு குஷ்பு தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஒரு நற்செய்தி. 9 ஆண்டுகள் கழித்து தெலுங்கில் திரிவிக்ரம், பவன் படத்தில் நான் நடிக்கிறேன். திரிவிக்ரம் அருமையான திரைக்கதையை எழுதி இருக்கிறார். எனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம். எனது கடைசி படம் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன். இப்போது அவரது சகோதரருடன் நடிக்கிறேன். படத்தில் நடிக்கும் முடிவை எடுக்க நீண்ட காலம் ஆனது. தமிழில் 7 ஆண்டுகள் கழித்து நடித்தேன். தெலுங்கில் நடிக்க 9 அண்டுகள் ஆகி இருக்கிறது.

ரசிகர்கள் ஏமாற்றம் அடையாத வகையில் நடிப்பேன் என்று நினைக்கிறேன்’ என்று குஷ்பு கூறியுள்ளார்.

Source: Maalaimalar

Author Image
murugan