உறுதியானது… சங்கமித்ராவில் ஜெயம் ரவி, ஆர்யா

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100 வது படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா நடிப்பது உறுதியாகியுள்ளது.

சுந்தர் சி. இயக்கும் இந்த 100 -வது படத்துக்கு சங்கமித்ரா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சரித்திர படமாக தயாராகும் இதன்  பட்ஜெட் 100 கோடிக்கும் மேல் என்கிறார்கள். ரஹ்மான் படத்துக்கு இசையமைக்கிறார்.

சூர்யா, மகேஷ்பாபு, விஜய் என்று பல பெயர்கள் அடிபட்டு கடைசியில் ஜெயம் ரவி நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது ஜெயம்  ரவியுடன் ஆர்யாவும் நடிக்கவிருப்பதை, ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

சங்கமித்ரா தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட உள்ளது.

செய்திகள்

Source: Webdunia.com