கபாலி படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்: தாணு வெளியீடு – வைரலாகும் வீடியோ

கபாலி படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்: தாணு வெளியீடு – வைரலாகும் வீடியோ

மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரஜினிகாந்த் நடித்த ’கபாலி’ திரைப்படம் அதிக வசூலை பெற்றது மட்டுமின்றி,  2016-ஆம் ஆண்டில் 150 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டது. இந்திய வசூலுக்கு இணையாக வெளிநாடுகளிலும் படம் வசூலித்துள்ளது.

இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக ‘கபாலி’ படத்தில் நீக்கப்பட்ட சில காட்சிகளை படத்தின் தயாரிப்பாளர் எஸ்.தாணு இன்று வெளியிட்டுள்ளார். இப்படத்தின் நீளம் கருதி கபாலி படத்தின் சில காட்சிகள் நீக்கப்பட்டிருந்தது. 

இன்று வெளியான கபாலி திரைப்படத்தின் காட்சியில், களைப்புடன் தாமதமாக வீட்டிற்கு வரும் கபாலியை அதட்டி, ஆசையுடன்  கட்டியணைக்க சொல்லும் குமுதவல்லியை வாரி அணைக்கிறார் கபாலி. கபாலியில் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியிடுவது  குறித்து நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் எஸ்.தாணு தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இன்று  ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் இன்று யூடியூபில் வெளியாகி வைரலாகி வருகிறது.

[embedded content]

செய்திகள்

Source: Webdunia.com

Author Image
murugan