அமெரிக்கா செல்லும் செல்வராகவன், சந்தானம் டீம்

செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடித்துவரும் மன்னவன் வந்தானடி படத்துக்காக பிப்ரவரியில் படக்குழு அமெரிக்கா  செல்லவுள்ளது.

காதல் படமாக தயாராகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. பொங்கலுக்கு பின் சென்னையில்  15 தினங்கள் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். அதனைத் தொடர்ந்து பிப்ரவரியில் சில வசனக் காட்சிகளையும், பாடல்  காட்சிகளையும் படமாக்க அமெரிக்கா செல்கின்றனர்.

அமெரிக்காவின் ப்ரூக்ளின் பகுதியில் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.

செய்திகள்

Source: Webdunia.com

Facebook Comments