மலையாளப் படத்தில் பாடகர்களாகும் அமலா பால், பிரகாஷ்ராஜ்

மலையாளப் படமான அச்சாயன்ஸில் அமலா பால், பிரகாஷ்ராஜ் இருவரும் தலா ஒரு பாடல் பாடுகின்றனர்.

அச்சாயன்ஸ் படத்தில் அமலா பாலுடன் பிரகாஷ்ராஜும் நடிக்கிறார். படத்துக்கு ரதீஷ் வேகா இசையமைக்கிறார். யாரையும் பாட  வைப்பதுதான் இவரது ஹாபி. ஆடுபுலியாட்டம் படத்தில் மம்தா மோகன்தாஸையும், ஜெயராமையும் பாட வைத்தார்.  இந்தமுறை அமலா பால், பிரகாஷ்ராஜ்.

அமலா பாலுக்கு பாடகிக்குரிய வாய்ஸ். அவர் பாடுவது ஓகே. ஆனால் பிரகாஷ்ராஜ்? படத்தில் இடம்பெறும் ஒரு கிராமத்துப்  பாடலுக்கு குரல்தர பிரகாஷ்ராஜ் சம்மதித்துள்ளார்.

அச்சாயன்ஸ் ராக்ஸ்.

செய்திகள்

Source: Webdunia.com

Facebook Comments