இந்திப் படத்துக்கு வசனம் எழுதும் மாதவன்

அமுல்பேபி மாதவன் இறுதிச்சுற்றில் ஆஜானுபாகு மாதவனாக வந்தபோதே தெரிந்துவிட்டது, இந்த ஆள் எதை வேண்டுமானாலும் செய்வார் என்பது. விரைவில் ஒரு படத்துக்கு மாதவன் வசனம் எழுதப் போகிறார், அதுவும் இந்தியில்.

 

 

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விக்ரம் – வேதா படத்தில் நடித்துவரும் மாதவன் அடுத்து சற்குணம் இயக்கும் படத்தில் நடிக்கிறார். முழுக்க காட்டில் தயாராகும் இந்தப் படத்தை தமிழ், இந்தியில் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். இரண்டையணம் சற்குணமே இயக்குகிறார்.

இந்தப் படத்தின் இந்திப் பதிப்புக்கான வசனத்தை மாதவனே எழுதுவது என்று முடிவாகியுள்ளது. அசத்துங்க பாஸ்…

செய்திகள்

Source: Webdunia.com

Facebook Comments