Go to ...

RSS Feed

இயக்குனருக்கு நயன்தாரா கண்டிஷன்


இயக்குனருக்கு நயன்தாரா கண்டிஷன்

4/23/2018 11:53:22 AM

ஹீரோயின்கள் படப்பிடிப்புக்காக வெளியூர்களுக்கு சென்றுவிடுவதாலும், வெவ்வேறு மொழிகளில் நடிப்பதாலும் அவர்களை இயக்குனர்கள் தேடிப்பிடித்து கதை சொல்லி கால்ஷீட் வாங்குவதற்குள் டயர்டு ஆகிவிடுகின்றனர். சில ஹீரோயின்கள் வெளியூர்களில் இருக்கும் பட்சத்தில் கதை சொல்ல நேரம் கேட்கும் இயக்குனர்களிடம் போனிலே யே கதை சொல்லுங்கள் என்று கூறுகின்றனர். சமீபத்தில் நடிகை நயன்தாராவை தொடர்பு கொண்ட ஒரு இயக்குனருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது.

மலையாளத்தில் பல்வேறு படங்களை இயக்கியதுடன் நடிகராக இருப்பவர் சீனிவாசன். இவரது தம்பி தயன் சீனிவாசன். நடிகராகவும் இருக்கிறார். தான் இயக்கும் புதிய படத்தில் நடிக்க நயன்தாராவிடம் கதை சொல்ல முடிவு செய்து அவரை தொடர்பு கொண்டார். செல்போனில் அவரை தொடர்புகொண்டபோது கதை கேட்க சம்மதித்த நயன்தாரா,’உங்கள் கதையை போனிலேயே 30 நிமிடத்துக்குள் சொல்லுங்கள். பிடித்திருந்தால் நடிக்கிறேன் இல்லாவிட்டால் என் மீது கோபப்படாதீர்கள்’ என்றார்.

இதையடுத்து கதை சொல்ல ஆரம்பித்தார். அடுத்த 10வது நிமிடத்திலேயே நயன்தாராவுக்கு கதை பிடித்துவிட நடிக்க சம்மதித்துவிட்டார். ஆனாலும் அடுத்தடுத்த சீனையும் கேளுங்கள் என்று கூறிய இயக்குனர் கதையை தொடர்ந்தார். அதைக்கேட்டு நயன்தாரா கலகலவென சிரித்தபடியே இருந்தார். அவரது சிரிப்புக்கு காரணம் இயக்குனர் தயன் கூறிய கதை நகைச்சுவை பின்னணியில் அமைந்ததாம்.

Source: Dinakaran

English summary
Director for nayantara condition

4/23/2018 11:53:22 AM senruviduvathalum for out of town for the shooting heroine, acting in different languages because a.