Go to ...

RSS Feed

3 நடிகைகள் எழுப்பிய சர்ச்சை; நடிகர் பதில்


3 நடிகைகள் எழுப்பிய சர்ச்சை; நடிகர் பதில்

10/11/2018 5:49:51 PM

கேரளாவில் நடிகையை கடத்தி பாலியல் தொல்லை தரப்பட்ட வழக்கில் கைதான நடிகர் திலீப் பின்னர் ஜாமீன் பெற்று வெளியில் வந்தார். இந்நிலையில் மலையாள நடிகர் சங்கமான அம்மா அமைப்பின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து திலீப் நீக்கப்பட்டார். பின்னர் நடிகர் மோகன்லால் சங்க தலைவராக தேர்வானார். அதன்பிறகு நடந்த பொதுக்குழுவில் திலீப் சங்கத்தில் மீண்டும் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

இதை கண்டித்து நடிகர் சங்கத்திலிருந்து நடிகைகள் ரீமா கல்லிங்கால், ரம்யா நம்பீஸன், கீது மோகன்தாஸ் ஆகியோர் உறுப்பினர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தனர். நடிகைகள் ரேவதி, பூ பார்வதி, பத்மபிரியா ஆகியோர் சங்க தலைவர் மோகன்லாலுக்கு ஒரு கடிதம் அனுப்பினர். அதில் திலீப்பை நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கேட்டிருந்தனர்.

இதுபற்றி நடிகைகளிடம் ஏற்கனவே மோகன்லால் பேச்சுவார்த்தை நடத்தினார். தற்போது இதுகுறித்து அவர் கூறும்போது, ‘திலீப்பை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கும் அதிகாரம் சங்க பொதுக்குழுவுக்குதான் உள்ளது. இந்த விவகாரம் குறித்து சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை செய்தபிறகே இதை தெரிவிக்கிறேன்’ என்றார் மோகன்லால்.

ஆனால் பொதுக்குழு எடுத்த முடிவை ரத்து செய்யும் உரிமை செயற்குழுவுக்கு உள்ளது’ என நடிகைகள் குறிப்பிட்டுள்ளனர். இருதரப்பினருமே சட்ட வல்லுனர்களிடம் மீண்டும் ஆலோசனை செய்து வருகின்றனர். திலீப் மீது நடவடிக்கை எடுக்காததால் நடிகைகள் ஏமாற்றம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

Source: Dinakaran