Press "Enter" to skip to content

Vijay 63 Updates: விஜய், அட்லி படத்தில் இணைகிறார் கதிர்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Highlights

  • அட்லி, விஜய் படத்தில் கைக்கோர்கிறார் கதிர்.
  • விஜய் 63 படத்தில் முக்கிய கதாபாத்திரத்டில் நடிக்க கதிர் ஒப்பந்தம்.
விஜய் நடிக்கும் 63வது படத்தை அட்லி இயக்கவுள்ள நிலையில், அதில் மற்றொரு கதாநாயகனாக நடிக்க கதிர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

’தெறி’ மற்றும் ’மெர்சல்’ படங்களுக்கு பிறகு விஜய் நடிக்கும் 63வது படத்தை அட்லி இயக்குகிறார். இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிப்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் மேலும் ஒரு கதாநாயகனை படக்குழு தேடி வருவதாக தகவல்கள் வெளியாகின.

image

விஜய், அட்லி படத்தில் கைக்கோர்க்கும் கதிர்

இந்த கதாபாத்திரத்தில் கதிர் நடிக்கலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தகவல் கூறிவந்தன. இதை தற்போது படக்குழு உறுதி செய்துள்ளது. கதிர் விஜய் 63 படத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

மேலும், ’மேயாத மான்’ பட புகழ் இந்துஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதை படக்குழு இன்னும் உறுதிசெய்யவில்லை.

ஏஜிஎஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்யும் நிலையில், படத்திற்கு முத்துராஜ் கலைப் பணிகளை மேற்கொள்கிறார். படப்பிடிப்பு வருகிற 20-ந் தேதி தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் படத்தை 2019 தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு தகவல் தெரிவிக்கிறது.

Source: samayam

More from திரையுலகம்More posts in திரையுலகம் »
Mission News Theme by Compete Themes.