Press "Enter" to skip to content

R Parthiepan : பார்த்திபன்-சீதா மகளுக்கு, பழம் பெரும் நடிகரின் கொள்ளுப்பேரனுடன் திருமண நிச்சயதார்த்தம்

Highlights

  • பார்த்திபன்-சீதாவின் மகள் அபிநயாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது.
  • அபிநயாவுக்கும் எம்.ஆர் ராதாவின் கொள்ளுப்பேரன் நரேஷ் கார்த்திக் என்பவருக்கும் நிச்சயம் ஆகியுள்ளது.
பார்த்திபன்-சீதாவின் மகள் அபிநயாவுக்கு தற்போது மறைந்த பழம் பெரும் நடிகரின் கொள்ளுப்பேரனுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது.

பார்த்திபன்சீதா இருவரும் காதலித்து 1990ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அபிநயா, கீர்த்தனா என இரு மகள்களும், ராக்கி என்ற மகனும் உள்ளனர். பார்த்திபன் – சீதா மனகசப்பு காரணமாக சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.

இவர்களில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நடித்த கீர்த்தனாவுக்கு கடந்தாண்டு திருமணம் ஆனது. இந்நிலையில் அபிநயாவுக்கும் சென்னையை சேர்ந்த நரேஷ் கார்த்திக் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது.

எம்.ஆர்.ராதாவின் கொள்ளு பேரன் :

அபிநயாவுக்கு நிச்சம் செய்யப்பட்டுள்ள நரேஷ் கார்த்திக் மறைந்த எம்.ஆர்.ராதாவின் மகன் வாசுவின் மகள் சத்யா ஜெயசந்திரனின் மகன் ஆவார்.

சீதா பேச்சு :

அபிநயா – நரேஷ் கார்த்திக் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அவர்களின் திருமணம் வரும் 24ம் தேதி நடைப்பெற உள்ளது.

என் மகள் அபிநயா என் அருகிலேயே இருக்க விரும்பியதால் வெளிநாட்டு வரன்களை தவிர்த்து வந்தோம். தற்போது சென்னையிலேயே மாப்பிள்ளை அமைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மகளின் திருமணத்திற்கான அழைப்பிதழை தற்போது கொடுத்து வருகின்றோம். என தெரிவித்துள்ளார்.

Source: samayam