Go to ...
RSS Feed

உடல் அழுகிய நிலையில் ரஜினி, விஜயகாந்த் பட பகைவன் நடிகர் மர்ம மரணம்


தமிழ், இந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான பகைவன் நடிகர் மகேஷ் ஆனந்த் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் 1980-கள் மற்றும் 90-களில் வெளியான பல மொழிப் படங்களில் பகைவனாகக நடித்து மிரட்டியவர் மகேஷ் ஆனந்த் (57). இவர் தமிழில் ரஜினிகாந்துடன் ’வீரா’ விஜயகாந்துடன் ‘பெரிய மருது’ போன்ற படங்களில் பகைவனாகக நடித்துள்ளார்.

மேலும், பாலிவுட் திரைப்படத்தில் அமிதாப் பச்சன், தர்மேந்திரா, சன்னி தியோல். கோவிந்தா ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு என மொத்தம் 200 படங்களுக்கு மேல் மகேஷ் ஆனந்த் நடித்துள்ளார்.

கடந்த 2000-ம் ஆண்டில் உஷா பச்சானி என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், பிறகு 2002ம் ஆண்டில் விவகாரத்து பெற்றார். அதை தொடர்ந்து மும்பை வெர்சோவாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனிமையாக இவர் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், அவர் வீட்டில் வேலை செய்யும் பெண் வழக்கம் போல மகேஷ் ஆனந்த் வீட்டுக்கு வந்துள்ளார். பல நிமிடங்கள் கதவை தட்டிய நிலையில் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது உடல் அழுகிய நிலையில் மகேஷ் ஆனந்த் இறந்து கிடந்தது தெரியவந்தது. அங்கே சுற்றிலும் மதுபாட்டில்கள் கிடந்தன.

உடனே மகேஷ் ஆனந்த் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது திரையுலகினர் பலர் மகேஷ் ஆனந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Source: samayam

Tags: ,