Press "Enter" to skip to content

முதல்வரின் மகன் நடித்த படம் நெட்டில் வெளியானதால் பரபரப்பு

முதல்வரின் மகன் நடித்த படம் நெட்டில் வெளியானதால் பரபரப்பு

2/14/2019 3:42:08 PM

கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமார் நடித்துள்ள கன்னட படம் சீதராமா கல்யாணா. இந்த படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்நிலையில் முழு படமும் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாகியுள்ளது. நிகில் குமார் ஜோடியாக ரச்சிதா ராம் நடித்திருக்கிறார். சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை குமாரசாமியின் மனைவி அனிதா தயாரித்துள்ளார்.

இணையதளத்தில் படம் வெளியானது தொடர்பாக அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: சீதராமா கல்யாணா படத்துக்கு பெருமளவில் செலவு செய்து, ஏராளமான தொழிலாளர்களின் உழைப்புடன் படமாக்கினோம்.

ஆனால் அந்த உழைப்பை சுரண்டும் விதமாக யாரோ திருட்டுத்தனமாக இந்த படத்தை திரையரங்கத்தில் மொபைலில் படம் எடுத்துள்ளனர். அந்த முழு படத்தையும் யூ டியூப்பில் பதிவிட்டுள்ளனர். இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட நபர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Source: Dinakaran

Mission News Theme by Compete Themes.