Go to ...
RSS Feed

சாதிய ஒடுக்குமுறை பேசும் உறியடி 2


சாதிய ஒடுக்குமுறை பேசும் உறியடி 2

3/14/2019 2:22:10 PM

சூர்யா தயாரித்துள்ள உறியடி 2 படத்தை விஜய்குமார் இயக்கியுள்ளார். படம் குறித்து அவர் கூறுகையில், இன்றைய சமூகத்திற்கு சாதி பிரிவினைதான் மிகப் பெரிய பிரச்னை. அதுதான் உறியடி, உறியடி 2 வருவதற்கு காரணம். ஒரு படைப்பாளிக்கான முழு சுதந்திரத்தையும் சூர்யா எனக்கு கொடுத்தார். சமூகத்தில் புரையோடியுள்ள சாதி அரசியலையும், சாதிய ஒடுக்குமுறைகளையும் கேள்வி கேட்டு, அதற்கான தீர்வை சொல்லும் படமாக உறியடி 2 உருவாகியுள்ளது.

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல், வேறுவிதமாக படமாக்கப்பட்டுள்ளது. யூ டியூப்பில் தோன்றும் மெட்ராஸ் சென்ட்ரல் சுதாகர் நடித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார்’ என்றார்.

Source: Dinakaran