Press "Enter" to skip to content

சேதுபதி பாகம் 2 உருவாகிறது

சேதுபதி பாகம் 2 உருவாகிறது

3/14/2019 3:06:06 PM

அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த படம் சேதுபதி. இதில் காவல் துறை அதிகாரி வேடத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். ரம்யா நம்பீசன், வேலராமமூர்த்தி உள்பட பலர் நடித்தனர். இப்போது இந்த படத்தின் 2வது பாகத்தை உருவாக்கும் முயற்சியில் அருண்குமார் ஈடுபட்டுள்ளார். அவர் சொன்ன கதைக் கரு விஜய் சேதுபதிக்கு பிடித்துவிட்டதாம்.

முழுமையான ஸ்கிரிப்ட் ஆயத்தம்யானதும் இதில் நடிக்கிறேன் என அவர் சொல்லியிருக்கிறார். விஜய் சேதுபதியை தவிர்த்து முதல் பாகத்தில் இருந்த யாரும் இதில் நடிக்க மாட்டார்கள் என கூறப்படுகிறது. இதுவரை தனது படத்தின் இரண்டாவது பாகத்தில் விஜய் சேதுபதி நடித்ததில்லை. இந்த படம் மூலம் முதல்முறையாக அவர் பார்ட் 2வில் நடிக்க இருக்கிறார்.

Source: Dinakaran