Go to ...
RSS Feed

அம்பேத்கர் ஆவணப் படம் தயாரிக்கும் ரஞ்சித்


அம்பேத்கர் ஆவணப் படம் தயாரிக்கும் ரஞ்சித்

3/14/2019 3:30:46 PM

அம்பேத்கர் பற்றிய 90 நிமிடங்கள் ஓடும் ஆவண படத்தை தயாரிக்கிறார் பா.ரஞ்சித். ஆவணப் பட டைரக்டர் ஜோதி நிஷா இந்த படத்தை இயக்குகிறார். அவருடன் சேர்ந்து ரஞ்சித் தயாரிக்கும் இந்த படத்தில், அம்பேத்கரின் மதம் குறித்த பார்வை, சுதந்திரம், இந்தியாவில் புராணங்கள், இந்திய அரசியலில் சாதி, ஒடுக்கப்பட்டோர் மற்றும் பெண்களின் நிலை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்த படம் பேச இருக்கிறது. படத்துக்கு பி.ஆர். அம்பேத்கர் இன்றும் நாளையும் என தலைப்பிட்டுள்ளனர்.

Source: Dinakaran