Press "Enter" to skip to content

Upcoming Tamil Movies: எல்லா காதலுமே சில்ற தனமானது தான்!

Upcoming Tamil Movies: எல்லா காதலுமே சில்ற தனமானது தான்!
பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாணின் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் உள்பட நாளை 6 படங்கள் வெளியாகவுள்ளது.

தமிழ் திரைப்படத்தில் ஒவ்வொரு வாரமும் குறைந்த ஒரு படமாவது திரைக்கு வரும். அந்த வகையில் இந்த வாரம் அதாவது நாளைக்கு இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், அகவன், கில்லி பம்பரம் கோலி, கிருஷ்ணம், ஜூலை காற்றில், நெடுநல்வாடை ஆகிய படங்கள் உள்பட 6 படங்கள் திரைக்கு வருகிறது. இந்தப் படங்களை பற்றி இப்போது பார்ப்போம்…

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

ப்யார் பிரேமா காதல் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும். ரொமாண்டில் த்ரில்லர் படத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், மாகாபா ஆனந்த், பால சரவணன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இப்படம் நாளைக்கு திரைக்கு வருகிறது.

கடந்த படமும் இதே போன்று ரொமாண்டிக் கதையை மையப்படுத்தி வெளியாகியிருந்தது. இப்படத்தில் பிக் பாஸ் ரைசா, ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

From Tomorrow (March 15th 2019) #IspadeRajavumIdhayaRaniyum Sneak Peek-1 https://t.co/7oiERVoDNi

— Raja Talkies Pondy (@rajatalkiespdy)

1552560458000

அகவன்


ஏபிஜி ஏழுமலை இயக்கத்தில் கிஷோர் ரவிச்சந்திரன், சிராஸ்ஸ்ரீ அஞ்சான், நித்யா ஷெட்டி, சின்னி ஜெயந்த், தம்பி ராமையா, ஆர்.என்.ஆர்.மனோகர் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். தமிழ் புராணக் கதையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படமும் நாளைக்கு திரைக்கு வருகிறது.

#Thala Reference In #Aghavan Movie வீரம் படத்துல தல சொன்ன மாதிரி “நமக்கு கீழ இருக்குறவங்கள நம்ம சந்தோஷமா பார்த்து… https://t.co/GSmY9oYdfN

— ⚖️தீனா சதீஷ்⚖️RCB (@silenttwits)

1552553508000

#Aghavan #AghavanFromTomorrow https://t.co/AHLXb7ibz9

— R.Vageesan (@RVageesan)

1552552350000

ஜூலை காற்றில்

மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவாவின் உதவியாளர் கே.சி. சுந்தரம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜூலை காற்றில். இப்படம் காதல் அதனால் ஏற்படும் மணமுறிவு என முற்றிலும் உறவுகளை பின்னணியாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. முக்கோண காதல், அதனால் ஏற்படும் தோல்வி, அதை தொடர்ந்து கிடைக்கும் வெற்றி என முற்றிலும் காதல் படமாகவே ‘ஜூலை காற்றில்’ உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக, மூன்று பேர் தொடர்பான கதை என்பதால், அவரவர் பார்வையில் பயணிக்கும் விதத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படமும் நாளை திரைக்கு வரவுள்ளது.

#JulyKaatril #JulyKaatrilFromTomorrow @AnjuKurian10 #KCSundaram1 @AnanthNag24 #KaviyaEntertainment @proyuvraaj https://t.co/W8ygXXUEM3

— sridevi sreedhar (@sridevisreedhar)

1552561347000

#JulyKaatril March 15. @AnanthNag24 https://t.co/YZci4rGAS9

— Sathish (@prosathish)

1552276120000

நெடுநல்வாடை


அறிமுக இயக்குனர் செல்வகண்ணன் இயக்கத்தில் பூ ராமு, மைம் கோபி, அஞ்சலி நாயர், அஜய் நடராஜ், செந்தில்குமரி ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் நெடுநல்வாடை. இப்படமும் நாளைக்கு திரைக்கு வருகிறது.

இதே போன்று கில்லி பம்பரம் கோலி மற்றும் கிருஷ்ணம் ஆகிய படங்களும் நாளைக்கு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘மகன் வழிப்பேரன், மகள் வழிப்பேரன்; என்ற பேதத்தை தாத்தாக்கள் ஏற்பதே இல்லை’ #NedunalvaadaiFromTomorrow… https://t.co/Oi35AlfdtZ

— IRIR ♠️❤️️ (@kollywoodnow)

1552560398000

8 Tamil Movies releasing on March 15th.. 1. #IspadeRajavumIdhayaRaniyum 2. #Aghavan 3. #JulyKaatril 4.… https://t.co/k8d0jR6C4a

— Mashup Reviews (@MashupReviews)

1552324001000

Movie pays tribute to Women independence and Women Empowerment. #IRIRFromTomorrow @jeranjit @iamharishkalyan… https://t.co/D0ykuPLXfR

— Ramesh Bala (@rameshlaus)

1552554501000

Source: samayam