Go to ...
RSS Feed

Arya Sayesha Marriage Pics: சென்னையில் ஆர்யா-சாயிஷா சைகல் திருமண வரவேற்பு!


Arya Sayesha Marriage Pics: சென்னையில் ஆர்யா-சாயிஷா சைகல் திருமண வரவேற்பு!
ஹைலைட்ஸ்

  • கஜினிகாந்த்’ படத்தில் நடித்தபோது ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது
  • இதையடுத்து கடந்த 10-ம் தேதி ஆர்யா – சாயிஷாவின் திருமண நிகழ்ச்சி இஸ்லாமிய முறைப்படி நடந்தது
நடிகர் ஆர்யா-சாயிஷா சைகல் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டு புதுமண தம்பதிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

‘அறிந்தும் அறியாமலும்‘ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் ஆர்யா. ‘கஜினிகாந்த்’ படத்தில் நடித்தபோது ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று டுவிட்டர் பக்கத்தில் இருவரும் தங்கள் காதலை உறுதி செய்தனர்.

Fantastic @arya_offl @sayyeshaa pics from their reception party in Chennai today.. By @pk_views … https://t.co/foXpqn6fTy

— Kaushik LM (@LMKMovieManiac)

1552581862000

இதையடுத்து கடந்த 10-ம் தேதி ஹைதரபாத்தில் உள்ள தனியார் ஹோட்டலில், இரு வீட்டார் சம்மதத்துடன் ஆர்யா – சாயிஷாவின் திருமண நிகழ்ச்சி இஸ்லாமிய முறைப்படி நடந்தது.

இதனை தொடர்ந்து, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஆர்யா-சாயிஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது. இதில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Source: samayam

Tags: ,