Press "Enter" to skip to content

சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் முதல் பார்வை விளம்பர ஒட்டியை வெளியிட்ட இயக்குனர் ஷங்கர்!

சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் முதல் பார்வை விளம்பர ஒட்டியை வெளியிட்ட இயக்குனர் ஷங்கர்!
இயக்குனர் சசி இயக்கத்தில், உருவாகி வரும் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் முதல் பார்வை விளம்பர ஒட்டியை இயக்குனர் ஷங்கர் வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் சசி இயக்கத்தில் சித்தார்த், ஜிவி பிரகாஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் சிவப்பு மஞ்சள் பச்சை. இப்படத்தில், சித்தார்த் ஒரு டிராபிக் காவல் துறை அதிகாரியாக நடித்து வருவதாகவும், ஜிவி பிரகாஷ் ஒரு விளையாட்டு வீரர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. அதோடு, ஜிவி பிரகாஷின் சகோதரியை சித்தார்த் காதலிப்பது போன்று இந்த படத்தின் கதை செல்வதாகவும் கூறப்படுகிறது.

Every colour is an emotion! The first look of #SivappuManjalPachai.. Hearing good things abt this film from Sasi, t… https://t.co/OrkiftREWC

— Kaushik LM (@LMKMovieManiac)

1555504411000

கடந்த ஜனவரி மாதம் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததாக நடிகர் ஜி.வி.பிரகாஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், இப்படத்தின் முதல் பார்வை விளம்பர ஒட்டி வெளியாகியுள்ளது. இதனை இயக்குனர் ஷங்கர் வெளியிட்டுள்ளார். இந்த முதல் பார்வை போஸ்டரில், சித்தார்த், கையில் துப்பாக்கி வைத்திருப்பது போன்றும், ஜிவி பிரகாஷ் முகம் முழுவதும் இரத்தக்கறை இருப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Thanks to my dear @shankarshanmugh sir for unveiling the first look of #SivappuManjalPachai. Means a lot to me… https://t.co/Ljx6F2iILr

— Siddharth (@Actor_Siddharth)

1555505250000

Source: samayam