Press "Enter" to skip to content

இனிமேல் தவறான வார்த்தை பயன்படுத்தமாட்டேன்: மன்னிப்பு கேட்ட கருணாகரன்!

இனிமேல் தவறான வார்த்தை பயன்படுத்தமாட்டேன்: மன்னிப்பு கேட்ட கருணாகரன்!
நடிகர் விஜய் குறித்து தவறான பதிவு பதிவிட்டதற்கு மன்னிப்பு கேட்பதாக நடிகர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

உப்பு கருவாடு என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தவர் நடிகர் கருணாகரன். அதற்கு முன்னதாக, ஜிகர்தண்டா, சூதுகவ்வும், இருமுகன், கலகலப்பு, பீட்சா, யாமிருக்க பயமேன், கோ 2, சீதக்காதி என்று பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், சர்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய கருத்துக்கு எதிராக சில பதிவு வெளியிட்ட கருணாகரனுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையில் டுவிட்டரில் மோதல் ஏற்பட்டது.

விஜய்யின் குட்டிக்கதை மற்றும் அவரது கருத்தை விமர்சித்த கருணாகரன், குட்டிக் கதைகள் வெறும் அரசியல் தலைவர்களுக்கு மட்டும்தானா? ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் நடிகர்கள் தன் நண்பன், நண்பிகள் அதனை பின்பற்றுகிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும் என்று விஜய்யை மறைமுகமாக பேசினார்.

இதனால், விஜய் ரசிகர்களுக்கும், கருணாகரனுக்கும் டுவிட்டரில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, டுவிட்டரிலிருந்து கருணாகரன் விலகினார். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் டுவீட் செய்த கருணாகரன், நான் பொதுவாக யாரையும் வெறுக்க மாட்டேன். விஜய்யை பற்றி அந்த வார்த்தை பயன்படுத்தியதற்காகவும், யாரையும் புண்படுத்தி பேசியிருந்தாலும் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, தனியார் இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்த கருணாகரன் கூறுகையில், இனிமேல், சமூக வலைதளத்தில் பாசிட்டாவாக செயல்பட முடிவெடுத்துள்ளேன். தளபதி விஜய்யுடன் படங்களில் நடிப்பதற்கு 2 முறை வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதனை நான் தவறவிட்டேன். எனக்கு முதலில் கிடைத்தது நண்பன் படத்தில் தான். அப்போது, மற்ற படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் படங்களில் நடிக்க முடியாமல் போயிற்று.

அதே போன்று புலி படத்திலும் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது. அதனை நான் பயன்படுத்த தவறிவிட்டேன். இது குறித்து அவரிடம் கூறியதற்கு கண்டிப்பாக சேர்ந்து பணியாற்றுவோம் நண்பா என்று அவர் கூறினார். எனக்கும் அவருடன் நடிக்க ஆசை தான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: samayam

More from திரையுலகம்More posts in திரையுலகம் »