Press "Enter" to skip to content

‘கசடதபற’ படத்தின் 6 இசையமைப்பாளர்கள் யார் யார்?

விஜய் நடித்த ‘புலி’ படத்தை இயக்கிய இயக்குனர் சிம்புதேவனின் வித்தியாசமான திரைப்படம் ‘கசடதபற’. இந்த படத்தில் 6 கதாநாயகன்கள், 6 கதாநாயகிகள், 6 எடிட்டர்கள், 6 ஒளிப்பதிவாளர்கள் மற்றும் 6 இசையமைப்பாளர்கள் பணிபுரியவுள்ளனர்.

இந்த படத்தில் பணிபுரியும் 6 எடிட்டர்கள் மற்றும் 6 ஒளிப்பதிவாளர்கள் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் சற்றுமுன் இந்த படத்தின்
6 இசையமைப்பாளர்கள் குறித்த தகவலைஇசையமைப்பாளர் கங்கை அமரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதன்படி இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், பிரேம்ஜி, சீன் ரோல்டன், சாம் சிஎஸ் ஆகிய 6 இசையமைப்பாளர்கள் இசையமைக்கவுள்ளனர். மேலும் நாளை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தின் மோஷன் விளம்பர ஒட்டியை வெளியிடவுள்ளார் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் வெங்கட்பிரபுவின் பிளாக் அனுமதிச்சீட்டு கம்பெனி தயாரித்து வருகிறது

Nandri thandhaiye!!! @gangaiamaren our family of music directors!! #6mdsofkasadatabara #kasadatabara #கசடதபற @thisisysr @Music_Santhosh @GhibranOfficial @Premgiamaren @SamCSmusic @RSeanRoldan https://t.co/shIP0lfKcE

venkat prabhu

(@vp_offl)

May 24, 2019

Source: Webdunia.com

More from திரையுலகம்More posts in திரையுலகம் »