Press "Enter" to skip to content

நகைச்சுவையில் இறங்கிய அஞ்சலி, ஏன் இப்படி?

நகைச்சுவையில் இறங்கிய அஞ்சலி, ஏன் இப்படி?
கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் பலூன் இயக்குனர் கே.எஸ்.சினிஷ் ‘தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி’ சார்பில் தயாரிக்கும் ஃபேண்டஸி நகைச்சுவை படத்தில் நடிக்க உள்ளார் அஞ்சலி. கூடுதல் ஈர்ப்பாக யோகிபாபு மற்றும் விஜய்தொலைக்காட்சிபுகழ் ராமர் ஆகியோரை முழு நீள கதாபாத்திரத்தில், அஞ்சலியுடன் ஒருதலை காதலில் ஈடுபடும் ரோட்சைட் ரோமியோக்களாக நடிக்கிறார்கள். இது குறித்து தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிப்பாளர் சினிஷ் கூறும்போது, “இந்த படத்தில் ஈர்க்கக்கூடிய விதிவிலக்கான அம்சம், இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் வடிவமைத்த அடிப்படை யோசனை. பெண்களை மையப்படுத்திய திரைப்படங்கள் எப்போதும் சூப்பர் நேச்சுரல் சிலிர்ப்பூட்டும் அல்லது சமூக படங்களாக இருப்பது தான் வழக்கம்.

Also Read:
அமலா பாலின் முன்னாள் கணவர் ஏ.எல்.விஜய்க்கு இரண்டாவது திருமணம் நடந்து முடிந்தது!

நகைச்சுவை படமாக முயற்சித்தாலும் கூட, முழு நீள நகைச்சுவை படமாக இருப்பதில்லை. சுவாரஸ்யமாக, இந்த கதை தன்னை ஒரு முழுமையான ‘பேண்டஸி நகைச்சுவை’யாக மாற்றிக் கொண்டது, மேலும் கிருஷ்ணன் ஸ்கிரிப்டை விவரித்த விதம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஏனெனில் நான் நிறைய நகைச்சுவை தருணங்களில் மெய்மறந்து சிரித்தேன்” என்றார்.

Also Read:
இந்தியா என் தாய் வீடு…அமெரிக்கா என் மாமியார் வீடு: யோகி பாபு!

அஞ்சலியை இந்த படத்துக்கு தேர்ந்தெடுத்ததன் காரணத்தை பற்றி இயக்குனர் கே.எஸ்.சினிஷ் விரிவாகக் கூறுகையில், “நாயகியின் கதாபாத்திரம் சில குணாதிசயங்களுடன்வடிவமைக்கப்பட்டுள்ளது. அவை சின்ன சின்ன வெளிப்படுத்தல்களின் மூலம் உடனடியாக கவனத்தை ஈர்க்கும், அவை நவைச்சுவையை வரவழைக்கும். நாயகிகளின் பட்டியலை பார்ப்பதற்கு முன்பே, நடிகை அஞ்சலி அத்தகைய தனித்துவமான பண்புகளை பெற்றவர் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்” என்றார்.

Also Read:
கூர்கா உள்பட நாளைக்கு வெளியாகும் 6 படங்களின் ஒரு பார்வை!

இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் இது குறித்து கூறும்போது, “அஞ்சலி இந்த கதாபாத்திரத்தில் நடிக்க தகுதியானவர் என்ற நம்பிக்கை இருந்தபோதிலும், அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வாரா? என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் எங்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக, நான் அவருக்கு கதையை விவரிக்கையில், அவர் ஸ்கிரிப்டை ரசிக்க ஆரம்பித்தார். அத்தகைய சைகை என் நம்பிக்கையை அதிகரித்தது.

[email protected] in Production No 1 starring @yoursanjali @iYogiBabu & VijayTv Fame “Ramar” shoot begins soon.… https://t.co/whNhMF1HD2

— Ramesh Bala (@rameshlaus)

1562837140000

இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதை அவர் திடீரென உறுதிப்படுத்தினார். சமீப காலங்களில் யோகிபாபு பல திரைப்படங்களில் நடித்து வருகிறார், அவரே முன்னணி கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். ஆனாலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில், முழு படத்திலும் தோன்றுவார். அதே போல, அஞ்சலி மற்றும் யோகி பாபு ஆகியோருடன் விஜய்தொலைக்காட்சிபுகழ் ராமரும் முழு படத்தில் இருப்பார்” என்றார்.

இந்த பிரபலமான நகைச்சுவை நடிகர்களை பற்றி குறிப்பிடும்போது, இதுபோன்ற வேடிக்கையான கதாபாத்திரங்களில் அவர்களை கற்பனை செய்து பார்ப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. முக்கியமான வேடங்களில் நடிக்க இன்னும் சில முக்கிய நடிகர்களுடன் பேச்சு நடந்து வருகிறது.

அர்வி (ஒளிப்பதிவு), விஷால் சந்திரசேகர் (இசை), சக்தி வெங்கட்ராஜ் (கலை), ரூபன் (படத்தொகுப்பு), என் ஜே சத்யா (ஆடை), குணா – ஃபிளையர்ஸ் & ஷெரிஃப் (நடனம்), அருண்ராஜா காமராஜ் (பாடல்கள்), திலீப் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள். கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்க இருக்கிறது.

Source: samayam

Mission News Theme by Compete Themes.