Press "Enter" to skip to content

பூணூல், இந்து கடவுள் அருகில் சிலுவை: மாதவனை வச்சு செஞ்ச இணையப் பயனாளர்கள்!

பூணூல், இந்து கடவுள் அருகில் சிலுவை: மாதவனை வச்சு செஞ்ச இணையப் பயனாளர்கள்!
ஒரு காலத்தில் தமிழ் திரைப்படத்தில் மக்கள் விரும்பத்தக்கது நடிகராக இருந்தவர் நடிகர் மாதவன். அலைபாயுதே என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அனைவரது இதயங்களையும் கொள்ளை கொண்டவர். அதன் பிறகு எத்தனையோ வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தமிழைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். கமல் ஹாசன் நடிப்பில் வந்த மன்மதன் அம்பு படத்திற்கு பிறகு 6 வருடங்கள் இடைவெளி விட்டு மீண்டும் இறுதி சுற்று படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு விக்ரம் வேதா. இந்த இரு படங்களுமே ஹிட் கொடுக்க, ராக்கெட்ரி நம்பி விளைவு என்ற படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார்.

Also Read:
திரைப்படத்தை விட்டு விலகுகிறாரா சமந்தா?

@ActorMadhavan Dear @jiks jixsi stand by Madhavan. We have been taught to keep our identity as Hindu at the same ti… https://t.co/Cgd89rxl6M

— Vineesh Kolangreth (@vineesh1202)

1565933859000

இந்த நிலையில், நேற்று சுதந்திர தினம், ரக்‌ஷா பந்தன் மற்றும் ஆவணி அவிட்டம் ஆகியவற்றை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து புகைப்படம் வெளியிட்டு தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். நேற்று ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு, சகோதரிகள் தங்களது சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்தனர். அப்படியிருக்கும் போது மாதவனுக்கோ, அவரது சகோதரிக்குப் பதிலாக மாதவனின் மகன் வேதாந்த் ராக்கி கயிறு கட்டிவிட்டுள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை மாதவன் வெளியிட்டு அனைவருக்கும் ரக்‌ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தப் புகைப்படத்தைப் பார்த்த பலரும் மாதவனை விளாசத் தொடங்கினர். ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணூல் மாற்றியுள்ளனர். தான் ஒரு பிராமணர் என்பதை காட்டவே மாதவன் அப்படி செய்துள்ளார் என்றும், இதனை ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை என்றும் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.இது ஒரு புறம் இருக்க, அப்பாவிற்கு பின்புறம் இருக்கும் பூஜையறையில் இந்து கடவுள்கள் புகைப்படத்திற்கு அருகில் சிலுவையும் இருந்துள்ளது. இதனை சுட்டிகாட்டிய ஒருவர், எங்கேனும் தேவாலயங்களில் இந்து கடவுள்கள் புகைப்படம் இருப்பதை பாத்திருக்கிறீர்களா? இது உங்களது கபட நாடகத்தை சுட்டிக்காட்டுகிறது என்று குறிப்பிட்டு விமர்சனம் செய்துள்ளார்.

Also Read:
Comali: கோமாளிக்கு இப்படியொரு வரவேற்பா? ஹாட்ரிக் வெற்றியை கொண்டாடிய ஜெயம் ரவி!

https://t.co/Imw3SqR2Zb https://t.co/x79cX50aRn

— Ranganathan Madhavan (@ActorMadhavan)

1565928471000

இதற்கு பதிலளித்த மாதவன் கூறுகையில், உங்களிடமிருந்து நான் மரியாதை கிடைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என்று நான் நம்புகிறேன். எனக்கு உலகின் பல்வேறு வழிபாட்டு தலங்களில் இருந்தும் எனக்கு ஆசிர்வாதம் கிடைக்கிறது. அது போன்ற வழிபாட்டு தலங்களில் இருந்து படங்கள், அடையாளங்கள், பரிசுப் பொருட்கள் வந்தன. சிலவற்றை நானே வாங்கியிருக்கிறேன். எனது வீட்டில் அனைத்து மத நம்பிக்கையைச் சேர்ந்தவர்களும் வேலை செய்கின்றனர். ஆதால், நாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் வழிபாடு செய்கிறோம். எனக்கு எம்மதமும் சம்மதம்.

Also Read:
Prashanth Next Movie: சித்தார்த்தும் இல்லை, தனுஷும் இல்லை, தட்டிச்சென்ற பிரசாந்த் !!

@ActorMadhavan You may get respect & love from liberals & seculars for this, who abuse & insult Hinduism daily. Hop… https://t.co/UsALqt5zG9

— CA Vishal (@vsurywanshi87)

1565929980000

எனது குழந்தை பருவம் முதல் அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என்று எனக்கு கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. இதைத் தான் நான் எனது மகனுக்கும் சொல்லியிருக்கிறே. எனது வீட்டிற்கு அருகில் கோயில் இல்லாத போது தர்கா, குருத்வாரா, தேவாலயங்கள் ஆகியவற்றிற்கு சென்று வழிபாடு செய்திருக்கிறேன்.

What I absolutely love about this picture is the unabashed way in which Madhavan owns his cultural roots. With the… https://t.co/EPsEvsw4Op

— குர்பிரீத் ಗುರ್‌ಪ್ರೀತ್ Gurpreet (@gurichopra)

1565855954000

நான் ஒரு இந்து என்பதை அறிந்தும் கூட எனக்கு அங்கெல்லாம் மரியாதை கிடைத்துள்ளது. எனது அனுபவங்கள் அனைவருக்கும் மரியாதை செய்ய கற்றுக்கொடுத்துள்ளது. உங்களுக்கும் அன்பும், அமைதியும் கிடைக்கட்டும் என்று மாதவன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: samayam