Press "Enter" to skip to content

Nerkonda Paarvai: அபிராமியை தொடர்ந்து தல படத்தில் நடிக்கும் பிக் பாஸ் பிரபலம்?

Nerkonda Paarvai: அபிராமியை தொடர்ந்து தல படத்தில் நடிக்கும் பிக் பாஸ் பிரபலம்?
தல அஜித்குமார் தமிழ் திரைப்படத்தின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் தற்பொழுது நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். பொங்கலுக்கு ரிலீசான “விஸ்வாசம்”மற்றும் இந்த மாதம் ரிலீசான “நேர்கொண்ட பார்வை” இரண்டும் நல்ல வசூலை பெற்றுள்ளது. “அமராவதி” என்ற மாபெரும் வெற்றிப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் அஜித் குமார். இதன் வெற்றியை தொடர்ந்து ஆசை, காதல் கோட்டை, வாலி, தீனா, பகைவன், வரலாறு, பில்லா, மங்காத்தா, வீரம், வேதாளம், விஸ்வாசம் என்று சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழகத்தில் வாக்கு மொத்த ரசிகர் பட்டாளத்தையும் தன் வசம் ஈர்த்துக் கொண்டார்.

2016ம் ஆண்டில் வெளியான இந்தி “பிங்க் படத்தின் மறுதயாரிப்புதான் “நேர்கொண்ட பார்வை என்பது அனைவரும் அறிந்ததே. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் பட நிறுவனத்திற்கு இந்தப் படத்தை நடித்துக் கொடுத்தார் அஜித் குமார். “சதுரங்க வேட்டை”, “தீரன் அதிகாரம் ஒன்று படத்தின்இயக்குனர் வினோத் இப்படத்தை இயக்கியுள்ளார்.

Also Read This:
Tharshan: பிக் பாஸ் தர்சன் கூட என்ன உறவு? மனம் திறந்த ஷனம் ஷெட்டி!

இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்திருக்கும் “நேர்கொண்ட பார்வை தமிழ் ரசிகர்கள் பெரிதும் கொண்டாடி வருகின்றனர். இப்படம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி உலகமெங்கும் வெளியீடு ஆகி மக்களிடம் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து அஜித்தின் 60ஆவது படத்தையும் இயக்கப் போகிறார் ஹெச் வினோத். பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தை இந்த மாத இறுதியில் துவங்க உள்ளனர். இந்தப் படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்க உள்ளார்.

Also Read:
உலக கதாநாயகன்க்களை பின்னுக்கு தள்ளி அழகான ஆணாக மாறிய ஹிரித்திக் ரோஷன்!!

இந்த நிலையில், கடந்த வாரத்திற்கு முன் வாரம் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆன ரேஷ்மா, AK-60 படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இவர் இதற்கு முன் நடிகர் விஷ்ணு விஷாலின் “வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்” படத்தின் மூலம் பிரபலமானர்.ரேஷ்மா, அப்படத்திற்கு பின் பெரிதாக எந்த படத்திலும் ஒப்பந்தமாகவில்லை. எனினும், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் மூலம் புஷ்பா என்ற கதாபாத்திரம் நல்ல பெயர் கொடுத்தது. இப்படத்தில் சூரிக்கு மனைவியாக நடித்திருப்பார். புஷ்பா புருஷன் என்ற கதாபாத்திரம் சூரியை இப்படத்தின் மூலம் மேலும் பிரபலமடைய வைத்துள்ளது.

Also Read:
300 கோடி வசூலைத் தொட்ட அஜித்!!

தற்போது அவர் அஜித் நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளது அவருக்குபெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் மீண்டும் கோலிவுட்டில் ஒரு கலக்கு கலக்கலாம் என்று நம்பி வருகிறார் ரேஷ்மா.

Source: samayam

Mission News Theme by Compete Themes.