பிரச்சனைகளை கடந்து நடந்த நடிகர் சங்க தேர்தல் முடிவு எப்போது?

பிரச்சனைகளை கடந்து நடந்த நடிகர் சங்க தேர்தல் முடிவு எப்போது?

பிரச்சனைகளை கடந்து நடந்த நடிகர் சங்க தேர்தல் முடிவு எப்போது?
பல பிரச்சனைகளைக்குப் பிறகு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் முடிவுகள் இன்று வரை அறிவிக்கப் படாமல் உள்ளது. விஷாலின் மீது கொண்ட அதிருப்தியினால் அவரது அணியிலிருந்து விலகிய அவரது நண்பர்கள் இயக்குனர் பாக்யராஜை நாடி புதிய அணியை உருவாக்கினர். நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ் கொண்ட பாண்டவர் அணியுடன் சங்கரதாஸ் சுவாமி என்ற புதிய அணி போட்டியிட்டது. இந்த சங்கரதாஸ் சுவாமி என்ற புதிய அணிக்கு பாக்யராஜ் தலைமை வகித்தார்.இந்த தேர்தல் பல குழப்பங்கள் பல பிரச்சனைகளுக்கிடையே நடைபெற்று முடிந்தது. ஆனால் இன்னும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாமல் இருக்கிறது.

Also Read:
300 கோடி வசூலைத் தொட்ட அஜித்!!

இந்த நிலையில் பெஞ்சமின் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தேர்தலில் தன்னை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. வெளியூர்ல் உள்ள சங்க உறுப்பினர்கள் தபால் மூலம் வாக்களித்திருக்க வேண்டும். அப்படி ஒருவேளை நேரில் வாக்களிக்க விரும்பினால் 7 நாட்களுக்கு முன்பே தகவலை தெரிவித்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், தேர்தலுக்கு முதல் நாள் வரை வாக்களிக்கும் படிவம் எனக்கு கொடுக்கவில்லை. அதனால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருக்கிறார்.

Also Read:
SIIMA Awards: சைமா விருது வழங்கும் விழாவில் கைபேசியை மறந்த பிக் பாஸ் ரைசா?

Also Read:
உலக கதாநாயகன்க்களை பின்னுக்கு தள்ளி அழகான ஆணாக மாறிய ஹிரித்திக் ரோஷன்!!

இது குறித்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆகஸ்ட் 8 ம் தேதிக்குள் விஷால் அணியினர் நேரில் ஆஜராகி இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி தேர்தல் முடிவை வெளியிட தடை விதித்தனர். இது விஷால் அணியினருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியிருந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 14-ஆம் தேதியன்று நீதி அரசர் அமர்வுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்துசங்கங்களின் பதிவாளர்பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொது செயலாளர் விஷால் நீதி அரசரிடம் தங்களின் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளனர். இதனால் விரைவில் இவ்வழக்கு முடிவுக்கு வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து நடிகர் சங்கத் தேர்தல் முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

Source: samayam

Author Image
murugan