தி ஆங்கிரி பேர்ட்ஸ் மூவி 2

தி ஆங்கிரி பேர்ட்ஸ் மூவி 2

கரு: கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை குழந்தைகளுக்கு Angry birds வழியே சொல்வது தான் கரு.

கதை: முதல் பாகத்தின் முடிவில் ஜக் கதாநாயகனாக birds ன் தீவைக் காப்பாற்ற, Angry birds அங்கே சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். தற்போது Angry birds தீவில் இருப்பவர்களும் piggy தீவில் இருப்பவர்களுக்கும் சண்டை போட்டும் கொள்கிறார்கள்.

இவர்கள் இப்படி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் வேலையில் மிகப்பெரிய ஆபத்து இரண்டு தீவுகளையும் நோக்கி வருகிறது. மிகப்பயங்கரமான ஆயுதம் கொண்ட தூர லாவா தீவில் இருந்து தாக்குதல் நடக்க Angry birdsம் piggyயும் இணைந்து அதை எதிர்த்து அழிக்க பயணம் கிளம்புகிறார்கள். அந்த பயணத்தில் வென்று தங்கள் உலகத்தை காப்பாற்றி கொண்டார்களா? என்பது தான் கதை.

மேலும் படிக்க:
மருத்துவத் துறையில் நிலவும் ஊழல் குற்றங்கள்: மெய் திரைவிமர்சனம்!

விமர்சனம்: கைபேசியில் காணொளி கேமாக வந்த Angry birds ஐ வைத்து வந்த முதல் பாகம் அதிரி புதிரி வெற்றியாக, அதன் தொடர்ச்சியாக வந்திருக்கிறது இந்த இரண்டாம் பாகம். குழந்தைகளுக்கான அனிமேஷன் படம், ஆனால் இதில் பெரியவர்களுக்கான ரசனையான காட்சிகளும் நிறைய செய்திகளும் சேர்ந்தே இருக்கிறது.

இம்மாதிரி கதைகளில் ஹாலிவுட் கொடிகட்டி பறப்பது அதன் சலிப்புறாத திரைக்கதையில் தான். படம் முழுக்க திரைப்படம் குழந்தைகள் அனுபவஙகள் அரசியல் என அத்தனை விவரங்கள் கொட்டிக்கிடக்கிறது. ஆனால் அதனை எளிதாக சிறு குழந்தைக்கும் பிடிக்கும் வகையில் கொடுப்பது தான் அவர்களின் சாமர்த்தியம்.

இதையும் படிங்க:
பெண்கள் கபடியின் பிரச்சினைகள்: கென்னடி கிளப் திரைவிமர்சனம்!

ஜக் தலைமையில் ஒரு குழு லாவா தீவை அழிக்க போவது தான் கதை அந்தக் குழுவில் ஒவ்வொரு கேரக்டருக்கும் உள்ள டீடெயில் அசர வைக்கிறது. அது திரைக்கதையில் வெளிப்படும் இடங்கள் சிரிப்பு சரவெடி. படம் முழுக்க ஹாலிவுட் ஆக்சன் படங்களை கிண்டலடிக்கும் வகையில் நகைச்சுவை நிரம்பியிருக்கிறது.

ஜேம்ஸ்பாண்ட் ஆக்சன் காட்சிகள் ஃபஞ்ச் வசனங்களை பறவைகள் பேசுவது, ஆக்சனில் ஈடுபடுவது, அடிவாங்கி அழுவது, அத்தனையும் மீறி மீண்டும் முயற்சிப்பது என அத்தனையும் அழகு. பாடல்கள், துள்ளல்கள், நகைச்சுவை என இது குழந்தைகளுக்கான குதூகல கொண்டாட்டம்.

எப்போதும் இம்மாதிரி படங்களில் குழந்தைகள் சந்திக்கும் மனப்பிரச்சனைகளும், அதற்கான தீர்வுகளும், அழகாய திரைக்கதைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். இதிலும் படம் முழுதும் அப்படியான காட்சிகள் மிளிர்கிறது.

Also Read This:
அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும்: பக்ரீத் திரை விமர்சனம்!

ஒவ்வொரு காட்சியும் ஆரம்பிப்பதிலும் முடிவதிலும் ஒரு ஆச்சர்யத்தை ஒளித்து வைத்திருக்கிறது. அது இடைவிடாமல் நம்மை. சிரிக்க வைக்கிறது. ஹாலிவுட் உருவாக்கத்தில் உலகில் நம்பர் 1 ஆக விளங்குகிறது. படமெங்கும் அது பிரதிபலிக்கிறது.

இது ஒரு அனிமேஷன் படமென்றாலும் முழுக்க நம்மையும் அந்த தீவுனுள் இழுத்து சென்று விடுகிறார்கள். வசனங்கள் அரசியல முதல் உலகின் அனைத்து விசயங்களையும் கிண்டலடிக்கிறது. இசையை விட ஒலிக்கலவை பல இடங்களில் அசரடிக்கிறது.

கிராபிக்ஸ் மற்றவர்கள் எட்டா முடியாத உயரத்தில் இருக்கிறது. Angry birds குழந்தைகளுக்கும் குழந்தை மனம் கொண்டவர்களுக்குமானது.

பலம்: நகைச்சுவையான திரைக்கதை, கிராபிக்ஸ், ஆக்சன் காட்சிகள்.

இறுதியாக, Angry birds குழந்தைகளுக்கு மட்டுமானது. குழந்தைகள் கதைகளை ரசிப்பவர்களுக்கு இது கொண்டாட்ட அனுபவம். மற்றவர்கள் ஒதுங்கிக் கொள்வது நலம்!

Source: samayam

Author Image
murugan