லண்டன் ரசிகையின் ஆசையை நிறைவேற்றி வைத்த நடிகர்

லண்டன் ரசிகையின் ஆசையை நிறைவேற்றி வைத்த நடிகர்

பாலிவுட்டில் இளம் நடிகர்களில் அதிக ஹிட் படங்களை கொடுத்துக்கொண்டிருப்பவர் ரன்வீர் சிங். இவருக்கும் நடிகை தீபிகா படுகோனேவுக்கும் சென்ற வருடம் திருமணம் ஆனது.  ரன்வீர்சிங்குக்கு உலகெங்கிலும் பெண் ரசிகைகள் அதிகம்.

இதில் ஒரு  லண்டனில் உள்ள கிரண் என்ற பெண்,இவரது தீவிரமான ரசிகையாக உள்ளார். இந்நிலையில்  அப்பெண் ரன்வீர் நீங்கள் லண்டன் வந்தால் கூறுங்கள் உங்களை வந்து சந்திக்கிறேன் என்று அடிகடி அவருக்கு தகவல் அனுப்பிக்கொண்டிருந்தார்.
 

இந்நிலையில் சமீபத்தில் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றார். அப்போது தன் ரசிகையின் நினைவு வரவே அவரிடன் தகவல் தெரிவிக்கலாமா என்று யோசித்தவர், அவர் கர்ப்பமாக உள்ளதை அறிந்து, அவரது வீட்டுக்கு நேரடியாக சென்று ரசிகைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ரன்வீர் சிங். 
 

இதுகுறித்து அப்பெண் , தன்வீட்டில் ரன்வீர் சிங் சுமார் 16 மணிநேரம் தங்கியதாகவும் ,தன்னையும் தன் கணவரையும் ஆசிர்வதித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Source: Webdunia.com

Author Image
Ilayaraja