மீண்டும் காதலிக்க விரும்புகிறேன் – சுருதிஹாசன்

தமிழ், தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகை சுருதிஹாசன், மீண்டும் காதலிக்க விரும்புகிறேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு திரைப்படம் பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார். சமீபத்தில் அவர் சுருதிஹாசனை பேட்டி எடுத்து இருந்தார். அந்த பேட்டியில் தனது காதல் வாழ்க்கை பற்றி சுருதிஹாசன் கூறியதாவது:- 

நான் இதுவரை ஒரே ஒருவரை தான் காதலித்துள்ளேன். நான் எதையும் எளிதாக எடுத்துக்கொள்வேன். அப்பாவியும் கூட. அதே நேரத்தில் மிகவும் உணர்வுபூர்வமானவள். எனவே தான் என்னை யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் காதலில் இருந்தது நல்ல அனுபவம். மீண்டும் காதலிக்க விரும்புகிறேன். சிறந்த நேசத்துக்காகவும் காதலுக்காகவும் காத்திருக்கிறேன். 

எனக்கு காதலராக வருபவர் நல்ல மனிதராக இருக்க வேண்டும். நகைச்சுவைத்திறன் இருக்கவேண்டும். சுத்தமாக இருக்கவேண்டும். அவ்வளவுதான்’ என்று கூறியிருக்கிறார்.

Related Tags :

Source: Malai Malar