அவரை சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன் – தமன்னா

நடிகை தமன்னா அளித்த பேட்டியில், அவரை சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன், ஆனால், இன்னும் நடக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

தமன்னா நடிப்பில் பெட்ரோமாக்ஸ் என்ற படம் வெளியாக இருக்கிறது. இதையொட்டி அவர் அளித்த பேட்டி:- 

தொடர்ந்து பேய் படங்களில் நடிப்பது ஏன்?

தேவி, தேவி 2 படங்களில் நடித்த பின்னர் மீண்டும் பேய் படத்தில் நடிப்பதில் நானும் விரும்பவில்லை. ஆனால் இது தெலுங்கில் அனந்த பிரம்மோ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படம். மற்ற பேய் படங்களில் இருந்து வித்தியாசமாக இருக்கும். கண்ணே கலைமானே, சைரா என சீரியஸ் படங்களில் நடித்ததால் ஒரு நகைச்சுவை படத்தில் வித்தியாசத்துக்காக நடித்தேன். 

பெட்ரோமாக்ஸ் வசனம் பற்றி தெரியுமா?

அந்த வசனம் இடம்பெற்ற கவுண்டமணி – செந்தில் நகைச்சுவை பற்றி ரோகின் விளக்கினார். கவுண்டமணி சாரை சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன். அது இன்னும் நடக்கவில்லை. 

முதல்முறையாக முதன்மை வேடத்தில் நடித்த அனுபவம்?

இந்த படம் என்னுடைய படம் அல்ல. தமன்னா நடிக்கும் என்ற போஸ்டரில் போடுவதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்கள், பணிபுரிந்த டெக்னிஷியன்ஸ் அனைவருமே ஈடுபாட்டுடன் பணிபுரிந்தனர். எனவே அனைவருடைய படம் தான் இது.

இனி முதன்மை வேடங்களில் மட்டும்தான் நடிப்பீர்களா?

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும்தான் நடிக்கவேண்டும் என்று நினைக்கவில்லை. அப்படி ஒரு வட்டத்தில் சிக்க மாட்டேன். எல்லா விதமான படங்களிலும் நடிக்க தான் விருப்பம். இப்போது வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க விருப்பம். அதிலும் ஸ்ரீதேவியின் வாழ்க்கை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் உடனே ஒப்புக்கொள்வேன். 

Related Tags :

Source: Malai Malar