ரசிகர்களுக்கு பிரியாவிடை கொடுத்து மலேசியா திரும்பும் முகென் ராவ்!

ரசிகர்களுக்கு பிரியாவிடை கொடுத்து மலேசியா திரும்பும் முகென் ராவ்!

விஜய் தொலைக்காட்சியில், தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பிக் பாஸ் 3, இந்த நிகழ்ச்சி கடந்தவாரம் ஞாயிற்றுக் கிழமை பிரமாண்டமான விருது வழங்கும் நிகழ்வோடு முடிவடைந்தது.

106 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முகென் ராவ் முதல் பரிசினைப் பெற்றார், கோப்பையுடன் பதக்கமும் அவருக்கு கிடைத்துள்ளது.

துவக்கத்தில் முகின்
பெரிதளவில் கவனிக்கப்படவில்லை என்றாலும், குடும்ப உறுப்பினர்கள் வந்துசென்றபோது அனைவரிடமும்
அவர் பழகியவிதம், பொருட்கள் செய்து கொடுத்தவிதம் என அனைத்தும் மிகப் பெரிய அளவில்
பேசப்பட்டது.

அதன்பின்னர் கோல்டன்
அனுமதிச்சீட்டைப் பெற போட்டிகளில் எதிர்பார்ப்பினைத் தாண்டி, சிறப்பாக விளையாடினார்.

அதன்பின்னர் முகினுக்கு
ரசிகர்கள் அதிகமாகினர், ஏறக்குறைய 7 கோடி வாக்குகள் பெற்று முதல் பரிசினைப் பெற்ற
இவர், தற்போது அவருடைய சொந்த நாடான மலேசியாவுக்கு கிளம்பிவிட்டார்.

விமானநிலையத்தில்
ரசிகர்கள் இவருக்கு பிரியாவிடை கொடுத்தனர்.
The post ரசிகர்களுக்கு பிரியாவிடை கொடுத்து மலேசியா திரும்பும் முகென் ராவ்! appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy