பிக் பாஸ் பற்றி பேச விரும்பவில்லை- சித்தப்பு அதிரடி!!

பிக் பாஸ் பற்றி பேச விரும்பவில்லை- சித்தப்பு அதிரடி!!

106 நாட்கள் நடைபெற்ற பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் முகென் ராவ் முதல் பரிசினைப் பெற்றார், கோப்பையுடன் பதக்கமும் அவருக்கு கிடைத்துள்ளது.

16 போட்டியாளர்களுடன் தொடங்கிய
இந்தப் போட்டியில் பருத்திவீரன் படத்தில் நடித்த சரவணனும் ஒருவர். சாண்டி மற்றும்
கவினுடன் நெருக்கமாக இருந்துவந்த அவர், அதிக இடங்களில்
வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டார்.

நிகழ்ச்சியின் முதல்
வாரத்தில் தனக்கு இரண்டு திருமணம் நடந்ததாகவும், முதல் மனைவி இருக்கும்போதே 2 வது திருமணம் செய்ததாக
கூற, அது வெளியில் பெரும் பிரச்சினை ஆனது.

அடுத்து கல்லூரியில்
படித்துக் கொண்டிருந்த போது, பேருந்தில்
பெண்களை உரசியிருக்கிறேன் என்று கூறி கடும் விமர்சனங்களுக்கு ஆளானார். பிக் பாஸ்
நிகழ்ச்சியின்மீது பலரும் குற்றம் சாட்டியநிலையில் இவர் திடீரென
வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின்
பிரமாண்ட விருது வழங்கும் விழாவில் இவர் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து அவர்
ஒரு நேர்காணலில் கூறியதாவது, “நான்
பிக் பாஸ் பற்றி பேச ஒருபோதும் விரும்பவில்லை. நான் அதனைக் கடந்து வேறு
விஷயங்களில் கவனம் செலுத்தி போய்க் கொண்டிருக்கிறேன்” என்று
திட்டவட்டமாக கூறியுள்ளார்.
The post பிக் பாஸ் பற்றி பேச விரும்பவில்லை- சித்தப்பு அதிரடி!! appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy