லட்சுமி மேனனுக்கு திருமணமா? 22 வயசு தான் ஆகுது!

லட்சுமி மேனனுக்கு திருமணமா? 22 வயசு தான் ஆகுது!

லட்சுமி மேனனுக்கு திருமணமா? 23 வயசு தான் ஆகுது!
சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த லட்சுமி மேனனுக்கு தற்போது திருமணத்துக்கு மாப்பிள்ளை தேடி வருகிறார்களாம். சுந்தர பாண்டியன் படத்தைத் தொடர்ந்து கும்கி, கொம்பன், றெக்க, வேதாளம், பாண்டியநாடு, மஞ்சப்பை, நான் சிகப்பு மனிதன், குட்டி புலி, ஜிகர்தண்டா, மிருதன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் யங் மங் சங் படம் உருவாகி வருகிறது. எப்போது திரைக்கு வரும் என்று இன்னும் அறிக்கப்படவில்லை.

எனினும், கும்கி, கொம்பன், சுந்தர பாண்டியன், வேதாளம் ஆகிய படங்களைத் தவிர வேறு எந்தப் படமும் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. அதோடு, பட வாய்ப்புகளும் அமையவில்லை. ஒரு காலத்தில் வேலையாக இருந்த நடிகை, இப்போது படமே இல்லாமல் ப்ரீயாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது 22 வயதாகும் லட்சுமி மேனனுக்கு அவரது குடும்பத்தினர் தற்போது மாப்பிள்ளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாப்பிள்ளை பிடித்துவிட்டால் விரைவில் திருமணம் என்று கூறப்படுகிறது. குறைந்த வயதில் ஒரு நடிகை திருமணம் செய்து கொள்வது மற்ற நடிகைகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source: samayam

Author Image
murugan