Press "Enter" to skip to content

தீபாவளி விடுமுறை மேலும் ஒருநாள் நீட்டிப்பு: அரசு அறிவிப்பால் மகிழ்ச்சி

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு மூன்று அல்லது நான்கு நாள் தொடர் விடுமுறை கிடைக்கும் என்பதால் வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு சென்று குடும்பத்துடன் தீபாவளியை அனைவரும் கொண்டாடி வந்தனர்.

ஆனால் இந்த ஆண்டு தீபாவளி ஞாயிறு அன்று வருவதை அடுத்து சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி ஞாயிறு அன்று இரவே அவசர அவசரமாக தீபாவளியை கொண்டாடி முடித்து விட்டு ஊரில் இருந்து பணிக்கு கிளம்ப வேண்டிய நிலையும் ஏற்பட்டது

இதனைக் கணக்கில் கொண்டு திங்கட்கிழமையும் அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்தது. இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த அரசு தற்போது திங்கட்கிழமையும் அரசு விடுமுறை என அதிரடியாக அறிவித்துள்ளது

இந்த அறிவிப்பு தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதனால் சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தீபாவளியை கொண்டாட பொதுமக்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. தீபாவளியை கொண்டாடி முடித்துவிட்டு திங்களன்று மாலை கிளம்பினால் போதும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

The post தீபாவளி விடுமுறை மேலும் ஒருநாள் நீட்டிப்பு: அரசு அறிவிப்பால் மகிழ்ச்சி appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Mission News Theme by Compete Themes.