விஜய் படத்தில் இணைந்த பிரபல தொகுப்பாளினி

விஜய் படத்தில் இணைந்த பிரபல தொகுப்பாளினி

தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது என்பது தெரிந்ததே. இந்த படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வசூலை குவித்து வரும் நிலையில் அவருடைய அடுத்த படமான ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது

இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிந்த நிலையில் தற்போது டெல்லியில் இந்த படத்தின் அடுத்தகட்டபடப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் இந்த படத்தில் கல்லூரியில் பழைய மாணவர்கள் சந்திக்கும் காட்சி ஒன்றும் ஒரு ஆக்சன் காட்சி மற்றும் ஒரு பாடல் காட்சி படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே மாளவிகா மேனன், ஆண்ட்ரியா ஆகிய இரண்டு நாயகிகள் நடித்து வரும் நிலையில், தற்போது மூன்றாவதாக பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி ரம்யா இணைந்துள்ளார். இந்த படத்தில் தான் நடிப்பதை உறுதி செய்த ரம்யா, விஜய் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பால் தனது வாழ்க்கையை முழுமை அடைந்து விட்டதாகவும், இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்

மேலும் இந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து வெளியில் சொல்ல முடியாது என்றும் ஆனால் இந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

Source: Webdunia.com

Author Image
Ilayaraja