நான் திருடினால் என் கணவர் சந்தோஷப்படுவார் – அனுஷ்கா சர்மா ஓபன் டாக்!

பாலிவுட் திரைப்படத்தின் உச்ச நடிகையான அனுஷ்கா சர்மா இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோலியை காதலித்து திருமணம் செய்துகொண்டு தொடர்ந்து புது படங்களில் நடித்து பாலிவுட் திரைப்படத்தின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இருந்து வருகிறார். 

ஜீரோ படத்தின் தோல்வியை அடுத்து தற்போது லால் கப்டான், ஹவுஸ்புல் 4 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.  இதற்கிடையில் அடிக்கடி தனது கணவர் விராட் கோலியுடன் ஜாலி ட்ரிப் அடித்து வருகிறார்.  

 

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அனுஷ்கா சர்மா, ” எனது கணவர்  விராட் கோலியின் உடைகளை நான் திருடி அணிகிறேன்,  உண்மையில் அவரது அலமாரியில் இருந்து பலவற்றை பயன்படுத்துகிறேன். பெரும்பாலும் டி-சர்ட் போன்ற துணி வகைகளை அதிகமாக திருடுகிறேன். அதோடு ஒரு சில நேரங்களில் அவருடைய ஜாக்கெட்டுகளை எடுத்து அணிந்துகொள்வேன். இப்படி  நான் அவரது உடைகளை திருடி அணியும்போது விராத் மகிழ்ச்சி அடைகிறார் என கூறினார்.

Source: Webdunia.com