கவலைக்கிடமான நிலையில் நடிகர் தென்னவன்

கவலைக்கிடமான நிலையில் நடிகர் தென்னவன்

விருமாண்டி, சண்டக்கோழி, ஜேஜே, வாகை சூடவா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் தென்னவன், உடல்நலம் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்.

பாரதிராஜாவின் ‘என்னுயிர் தோழன்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தென்னவன். பின்னர் கமல்ஹாசனின் ‘விருமாண்டி’ படத்தில் நடித்து பிரபலமானார்.

தொடர்ந்து திவான், ஜெமினி, சண்டக்கோழி, ஜேஜே, வாகை சூடவா, கத்திச் சண்டை உள்பட பல படங்களில் பகைவனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடரிலும் நடித்து வருகிறார்.

52 வயதாகும் தென்னவனுக்கு திடீரென்று மூளையில் பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தென்னவனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல்நிலை கலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan