கைதி படக்குழுவை பாராட்டிய இயக்குநர் பா.ரஞ்சித்

கைதி படக்குழுவை பாராட்டிய இயக்குநர் பா.ரஞ்சித்

கைதி படக்குழுவை புகழ்ந்து பா.ரஞ்சித் ட்வீட் செய்துள்ளார்.
தீபாவளி விருந்தாக கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அசத்தலாக வெளியான படம் கைதி. ஒரே இரவில் நடக்கும் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இதை எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ளார்.

’பிகில்’ படத்துடன் வெளியான இந்த சிறிய வரவு செலவுத் திட்டம் திரைப்படம், தற்போது வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பு பெற்று வருகிறது. ஒரு படம் என்றால் பாட்டு, காதல், கதாநாயகி போன்றவை எல்லாம் இருக்கும் என்ற நிலைப்பாட்டை லோகேஷ் கனகராஜ் மாற்றியமைத்துள்ளார்.

சூப்பர் ஸ்டாருடன் பரத்தை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் பிரபுதேவா

கைதி படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என்று அனைவரும் பாராட்டி வருகின்றனர். சிறிய வரவு செலவுத் திட்டத்தில் ஒரு நல்ல கதையை கொடுத்த லோகேஷை கோலிவுட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் கைதி படத்திற்கு பா. ரஞ்சித் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘கைதி சுவாரசியமான எழுத்து & அற்புதமான திரையாக்கம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மிக இயல்பாக நடிப்பாற்றலை வெளிப்படுத்திய கார்த்தி, நேர்த்தியான ஒளிப்பதிவு சத்யா.

Thalapathy 64 முதல் முறையாக விஜயுடன் நடிக்கும் ரம்யா

துணை கதாபாத்திரங்கள், இசை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அசாத்தியவேலைபாடு, துணிச்சலுடன் தயாரித்த எஸ்.ஆர்.பிரபு என்று அனைவருக்கும் வாழ்த்துகள்!’ என்று குறிப்பிட்டுள்ளார்.

#Kaidhi சுவாரசியமான எழுத்து& அற்புதமான திரையாக்கம்@Dir_Lokesh மிகஇயல்பாக நடிப்பாற்றலை வெளிப்படுத்திய@Karthi_Offl நேர்த்தியான ஒளிப்பதிவு @sathyaDP துணை கதாபாத்திரங்கள், இசை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அசாத்தியவேலைபாடு, துணிச்சலுடன் தயாரித்த @prabhu_sr அனைவருக்கும் வாழ்த்துகள்!

— pa.ranjith (@beemji)

November 8, 2019

விஜயின் பிகிலுடன், கைதி படம் வெளியானதால் குறைவான திரையரங்குகள் மட்டுமே கிடைத்தன. ஆனால் நாளடைவில் கைதி படத்திற்கு கிடைத்த வரவேற்பினால் திரையரங்குகள் கூடுதலாக கிடைத்து வசூல் செய்து வருகிறது.

Source: samayam

Author Image
murugan