Press "Enter" to skip to content

சூப்பர் சிங்கர் பருவம் பட்டத்தை வென்ற மூக்குத்தி முருகன்!

விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் பருவம் 7 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி இன்று நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் அனிருத் பங்கேற்றார்.

பல்வேறு கட்டங்களைத் தாண்டி நடைப்பெற்ற இறுதிப் போட்டிக்கு சாம் நிஷாந்த், புண்யா, மூக்குத்தி முருகன், விக்ரம் மற்றும் கௌதம் ஆகிய ஐந்து பேர் தகுதிப் பெற்றனர்.

இன்று நடந்த இப்போட்டியில் மூன்றாவது இடத்தை சாம் நிஷாந்த் மற்றும் புண்யா இருவரும் பெற்றனர். இரண்டாமிடத்தை விக்ரம் பெற்றார். மூக்குத்தி முருகன் முதலிடத்தைப் பெற்று சூப்பர் சிங்கர் பருவம் 7 வின்னர் பட்டத்தை வென்றார்.
The post சூப்பர் சிங்கர் பருவம் பட்டத்தை வென்ற மூக்குத்தி முருகன்! appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Mission News Theme by Compete Themes.