Press "Enter" to skip to content

முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்

இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் நேற்றிஇரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87.

கடந்த 1990 முதல் 1996-வரையிலும் இந்தியாவின் 10வது தலைமைத் தேர்தல் ஆணையராக பதவி வகித்தவர். இவருடைய காலக்கட்டத்தில் இந்தியாவில் முதல்முதலாக வாக்காளர் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. நல்ல அதிகாரி, யாருக்கும் தலைசாய்க்காத நேர்மையானவர், குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு அடிபணியாமல் நேர்மையாக பணிசெய்தவர் போன்ற பெருமைக்கு சொந்தக்காரர்.

தேர்தல் ஆணையம் என்று ஒன்று உள்ளது என்பதையும், அதற்கான அதிகாரங்கள் என்ன என்பதையும் நாட்டுமக்களுக்கு மட்டுமின்றி அரசியல்வாதிகளுக்கும் காட்டியவர் டி.என்.சேஷன் என்பது குறிப்பிடத்தக்கது. வாக்காளர்களுக்கு அடையாள அட்டை தந்து கள்ள ஓட்டை தடுத்து தேர்தல் கமிஷனர் பதவிக்கு பெருமை சேர்த்தவர் இவர்தான்.
The post முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார் appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Mission News Theme by Compete Themes.