திருக்குறள் புத்தகம் எடைக்கு போகிறதா? கஸ்தூரியின் சர்ச்சை கருத்து!

திருக்குறள் புத்தகம் எடைக்கு போகிறதா? கஸ்தூரியின் சர்ச்சை கருத்து!

கடந்த சில நாட்களாக ஆவின் பால் பாக்கெட்டுக்கள் திருக்குறள் அச்சடிப்பது குறித்த ஆலோசனை நடந்து கொண்டிருப்பதும் இதனை விரைவில் செயல்படுத்த திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது குறித்தும் பல்வேறு தரப்பினர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து நடிகை கஸ்தூரி கூறியதாவது:

அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் மூன்றோடு ஆவின் பாலும் சேர்க்கிறது. நல்ல விஷயம்தானே? காலைப்பொழுது திருக்குறளோடு துவங்கும் . தொலைக்காட்சி, FM வானொலிவில் தினம் ஒரு குறள் சொல்கிறார்களே. கோலம், குறள், காபி என்று வழக்கப்படுத்திக்கொள்ளலாம்.

பால் கவர் குப்பைக்கு போகுமே என்று யோசிப்பதெல்லாம் ஓவர். குறள் எழுதும் பயிற்சி தாளும் , ஏன் திருக்குறள் புத்தகமே கூட எடைக்கு போகிறது. நானெல்லாம் பள்ளியில் தமிழ் படிக்கவில்லை. பஸ்ஸில் தான் திருக்குறள் படித்து கற்றுக்கொண்டேன். தினம்தோறும் வீடு தேடி குறள் வருவது நல்ல விஷயம்தான்

கஸ்தூரியின் இந்த கருத்துக்கு ஒரு டுவிட்டர் பயனாளி, ‘எடப்பாடி அரசின் முட்டாள்தனமான ஐடியாவை எல்லாம் உங்க மாதிரி ஆட்கள்தான் ஆதரிக்க முடியும் தோழி’ என்று கூறியதற்கு நடிகை கஸ்தூரி, ‘எனக்கு நல்ல யோசனையாகத்தான் படுகிறது. கலைஞர் பஸ்ஸில் எழுதிவைத்ததை படித்து 20 குறள் கற்றேன். குங்குமத்தில் குறளோவியம் படித்து இன்னும் நூறு குறள் கற்றேன். பத்திரிகை என்னவோ எடைக்குதான் போயிற்று. சன் டிவியில் காலையில் குறள் விளக்கம் – பல் தேய்த்துக்கொண்டே அதை பார்ப்போம். அது ஓகேவா? என்று கூறியுள்ளார்.

The post திருக்குறள் புத்தகம் எடைக்கு போகிறதா? கஸ்தூரியின் சர்ச்சை கருத்து! appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy